ஒருவழியாக முடிவுக்கு வரும் விடாமுயற்சி.. சுரேஷ் சந்திரா சொன்ன சுவாரசியமான தகவல்கள்

Vida Muyarchi : நேற்றைய தினம் அஜித் மற்றும் திரிஷா இருவரும் இளமையாக இருக்கும் விடாமுயற்சி போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. அஜித்தை இவ்வாறு இளமையான தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தனர்.

ஏனென்றால் சமீபகாலமாகவே அஜித் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் தான் நடித்து வருகிறார். அதோடு விடாமுயற்சியின் ஆரம்ப போஸ்டர்களில் கூட அவ்வாறு தான் இருந்து வந்தார். ஆனால் திடீரென நேற்று வெளியான போஸ்டரால் இரண்டு வேடங்களில் அஜித் நடிக்கிறாரா என்று சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் சுரேஷ் சந்திரா விடாமுயற்சி படத்தை பற்றி நிறைய அப்டேட் கொடுத்திருக்கிறார். அதாவது விடாமுயற்சி படத்தில் இரண்டு தோற்றத்தில் அஜித் வருகிறார். மேலும் இளமையான தோற்றம் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் அமைந்துள்ளதாம்.

விடாமுயற்சி படத்தை பற்றி சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்

ஆகையால் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் அஜர்பைஜானில் வருகின்ற ஜூலை 23 உடன் படப்பிடிப்பு முடிய இருக்கிறதாம். இதற்கு அடுத்தபடியாக விடாமுயற்சி படக்குழு ஹைதராபாத் செல்ல இருக்கின்றனர்.

அங்கு 8 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. அதை முடித்து விட்டால் விடாமுயற்சி படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெறும் என்று சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். இதன் மூலம் விடாமுயற்சி படப்பிடிப்புக்கு பூசணிக்காய் உடைக்கும் நேரம் மிக விரைவில் வரவுள்ளது.

எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியும் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையை அஜித் ரசிகர்களுக்கு சுரேஷ் சந்திராவின் இன்டர்வியூ ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அட்லி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →