வளர்ச்சி பிடிக்காத வடிவேல்.. சூட்டிங்கை கேன்சல் செய்து கிளம்பிய அவலம்

பல படங்களில் ஏற்பட்ட பிரச்சினையினால் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட வடிவேலு, தற்போது அதிலிருந்தெல்லாம் மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

உதயநிதியின் மாமன்னன் படம், நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படங்களுக்கான படப்பிடிப்பில் மாறி மாறி வடிவேலு கலந்து கொள்கிறார். இதில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஹீரோவாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் வளர்ந்து வரும் காமெடியன் ரெடின் கிங்ஸ்லியும் வடிவேலுக்கு போட்டியாக இறக்கி விடுகின்றனர்.

சுராஜ் இயக்கத்தில் லைக்கா தயாரிக்கும் பிரம்மாண்டமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது ரெடின் கிங்ஸ்லி இரண்டு மணி நேரம் லேட்டாக வந்ததால் கோபப்பட்ட வடிவேலு ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பி விட்டாராம்.

இப்ப வந்த நடிகருக்காக நான் இவ்வளவு நேரம் காத்திருக்குவதா என்ற கோபத்தில் வடிவேலு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து கிளம்பி விட்டாராம். இதனால் பலரும் ரெடின் கிங்ஸ்கிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பலர் பேசி வருகின்றனர்.

பலரும் அவரை கீழே இறக்குவதற்காக பல திட்டங்களை தீட்டி வருகின்றனர் என்றும் சொல்கின்றனர். ஒரு சிலர் காமெடியன்கள் ரைமிங் டைமிங் மூலம் நகைச்சுவை உணர்வை தூண்டுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவிற்கு புதிய வரவான ரெடின் கிங்ஸ்லி வாய்மொழியால் ரசிகர்களை சிரிக்க வைத்து கவனம் பெற்றிருக்கிறார்.

இவர் நடித்த டாக்டர், எதற்கும் துணிந்தவன், கோலமாவு கோகிலா, அண்ணாத்த போன்ற ஒருசில படங்களின் மூலமே இவர் சினிமாவில் வெகு சீக்கிரமாகவே பிரபலமாகி உள்ளார். எனவே இவருடைய வளர்ச்சியை பார்த்து, வடிவேலுக்கு ஒருவிதமான புகைச்சல் ஏற்பட்டுள்ளதாலே இப்படி எல்லாம் வெளிப்படுத்துகிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →