கோளாறு முத்தி திரியும் வடிவேலு.. ரீ என்ட்ரிக்கு உதவிய சுந்தர் சி மீது பற்ற வைத்த புது புகார்

புலம்பலையும், வடிவேலுவையும் பிரிக்கவே முடியாது என்ற நிலைமைக்கு போய்விட்டார் இந்த வைகை புயல். சுந்தர் சியுடன் சுமார் 20 வருடங்கள் பின் இணைந்து படம் பண்ணினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளிவந்த கேங்கர்ஸ் படத்தை பார்த்த மக்கள் வடிவேலுவை பழையபடி ரசித்தார்கள்.

படத்தில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியது ஆனால் கதை என்று பார்த்தால் எப்பொழுதுமே சுந்தர்சியின் பழைய டிராக் தான். படமும் ஓரளவுக்கு நல்ல வசூலை பெற்று தந்தது. இப்பொழுது வடிவேலு இந்த படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் சுந்தர் சி தான் கெடுத்து விட்டார் என கூறி வருகிறாராம்.

படத்தில் இன்னும் நிறைய காமெடி காட்சிகள் இருக்கிறது. அதை எல்லாம் சுந்தர்சி கட் செய்து விட்டார். அதை பத்திரமாக வைத்துள்ளார். அதை சேர்த்து இருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும் என புலம்பி தள்ளுகிறாராம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வடிவேலு சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார் ஆனால் இப்பொழுது கேங்கர்ஸ் படம் தான் அவருக்கு கை கொடுத்துள்ளது.

ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த படம் இந்திரலோகத்தில் நா அழகப்பன். அப்போதைய காலகட்டத்தில் இந்த படத்தை பற்றியும் நிறைய புகாரை கூறினார் வடிவேலு. இந்த படத்தை இயக்கியவர் தம்பி ராமையா, படத்தில் நிறைய காட்சிகளை கட் செய்துவிட்டார் என புகார் ஒன்றை கூறினார்.

மேலும் அந்த படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். படம் அதிக நேரம் ஓடுவதால் சில காட்சிகளை கட் செய்தார். தயாரிப்பாளர் சொல்லியதால் தான் தம்பி ராமையா கட் செய்தார் ஆனால் அப்போதே வடிவேலு இவரிடம் சண்டைக்கு போனார். இப்பொழுது மீண்டும் சுந்தரி சியை வம்பு இழுத்து வருகிறார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →