300 படங்கள் நடித்த போண்டாமணி சேர்த்து வைத்த சொத்து.. திரும்பி கூட பார்க்காத வடிவேலு

Vadivelu who did not help when Bonda mani kidney failure: தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமில்லை எண்ணும் அளவு ஒரு பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் குறிப்பிட்ட வசனங்கள் உடல் மொழிகள் மூலம் நீங்கா இடம் பிடித்தவர்கள் ஒரு சிலரே. “இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு நீங்களும் என்கூட வந்து பிச்சை எடுக்கலாம்”, “அடிச்சு கேப்பாங்க, சொல்லிடாத!” என்ற போண்டாமணியின் வசனங்கள் பிரபலமானதே!

இலங்கையிலிருந்து அகதியாக வந்து நகைச்சுவை நடிகராக மாறியவர் கேதீஸ்வரன் என்கின்ற போண்டாமணி அவர்கள்.

அரசியலில் நடிப்பும், சினிமாவில் அரசியலும் உட்பகுந்து அப்பாவி மனிதர்களை பம்பரமாய் சுழற்றிவிடுகிறது. உதாரணமாக போண்டாமணி  ஒரு சில படங்களில் அவ்வப்போது தலை காட்டிய நிலையில் சின்னகலைவாணர் விவேக்கிடம் தஞ்சம் புக, வடிவேலு உடன் நடித்த ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

இதைப் பார்த்த வடிவேலோ எதற்கு போண்டாமணியை உள்ளே கொண்டு வார? என்று விவேக்கிடம் கூற, ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம். திறமையானவர் என்று சப்போர்ட் வேற செய்துள்ளார். போண்டாமணி அந்த படத்தில் நடித்த பிறகு விவேக் அவர்கள், இனி நீங்க என் பக்கம் வரவேண்டாம். வடிவேல் உடன் நடித்த காட்சிகள் சரியாக வந்துள்ளது.  நீங்க இனிமேல் வடிவேல் டீமுடன் சேர்ந்து விடுங்கள் என்று ஒதுக்கினாராம்.

விடாக்கண்டனிடம் இருந்து தப்பித்து கொடாக்கண்டனிடம் போன கதை மாதிரி வடிவேலு அலப்பரையோ வேற மாதிரி இருந்ததாம். வடிவேலு உடன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த போண்டாமணிக்கு இறுதியில் கிட்னி ஃபெயிலியர் ஆனபோது உதவி கேட்க போய் கண்டுக்காமல் இருந்து உள்ளார் வடிவேலு.

300 படங்களுக்கு மேல் திரையில் நடித்திருந்தாலும் பல படங்களுக்கு சம்பளமே கொடுக்காமல் ஏமாற்றி உள்ளார்களாம். அதுபோக மீதி படங்களில் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் தனக்கென சேர்த்து வைத்துக் கொள்ளாது எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வாராம் போண்டாமணி. கடைசி வரை வாடகை வீட்டில் வசித்த போண்டாமணிக்கு அக்கவுண்டில் பத்தாயிரம் ரூபாய் கூட முழுதாக இல்லையாம்.

போண்டாமணியின் மறைவிற்கு மாற்றுத்திறனாளியான போண்டாமணியின் மனைவிக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த் ஒரே செக்கில் அவரது கடனையும் அடைத்தாராம். மகனை நன்றாக படிக்க வைத்த போண்டாமணிக்கு மகளைப் படிக்க வைக்க இயலாமல் போகவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் போண்டாமணி மகளின் கல்விச் செலவை ஏற்பதாக கூறினார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →