நாங்க கொரங்கா? புள்ளி விவரத்தோடு நயனை பொளந்து கட்டிய வலைபேச்சு.. செத்த சும்மா இருங்க அம்மணி!

Nayanthara: நடிகை நயன்தாராவுக்கு ஜென்ம சனி எதுவும் நடந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் அவர் கை பட்ட இடம் எல்லாம் துலங்கும். இப்போ அவர் கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா இருக்குது.

நயன்தாரா the fairytale டாக்குமெண்ட்ரியில் ஆரம்பித்து அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் வலைப்பேச்சு சேனலை சேர்ந்தவர்களை மூன்று குரங்குகள் என விமர்சித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் தன்னை பற்றி பேசுவதால் தான் அவர்களுக்கு யூடியூபில் காசு கிடைக்கிறது எனவும் விமர்சித்திருந்தார்.

புள்ளி விவரத்தோடு நயனை பொளந்து கட்டிய வலைபேச்சு சேனல்

இதற்கு தற்போது அந்த சேனல் புள்ளிவிவரத்தோடு சில தகவல்களை அளித்திருக்கிறது. அதாவது வலைப்பேச்சு சேனலில் ஒரு மாசத்திற்கு 30 வீடியோ வெளியாகிறது.

இதில் இந்த வருடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நயன்தாராவை பற்றி ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் மாதம் இரண்டு செய்தி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் தலா ஒரு செய்தி.

டிசம்பர் மாதம் மூன்று செய்திகள் என இந்த சேனல் தங்களுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தனுஷ் நயன்தாரா விஷயத்தில் நயன்தாராவுக்கு சாதகமாக இவர்கள் வீடியோ போடவில்லை. இதைத்தான் நயன்தாரா கோபமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

எங்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியும், அதனால் தான் நாங்கள் நயன்தாராவுக்கு சப்போர்ட் பண்ணவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment