துணிவுக்கு முந்திய வாரிசு.. டீ கிளாஸ், கூலர்ஸ் உடன் பிரம்மாண்ட பேனர், தியேட்டரில் மாஸ் காட்டும் தளபதி

8 வருடங்களுக்குப் பிறகு தல, தளபதி இருவரும் பொங்கல் தினத்தன்று திரையில் மோதிக் கொள்கின்றனர். இதனால் விஜய்யின் வாரிசு பட மற்றும் அஜித்தின் துணிவு பட ப்ரொமோஷன்கள் இனி வரும் நாட்களில் படுச்சோராக நடக்கப் போகிறது என எதிர்பார்த்தனர்.

அதற்கேற்றார் போல் தற்போது விஜய்யின் வாரிசு படம் உலகம் முழுவதும்பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை குறிக்கும் விதத்தில், பெரிய கட்டவுட் அடித்து, படம் ரிலீஸ் ஆக இருக்கும் சென்னையின் சத்யம் மற்றும் கமலா தியேட்டர்களுக்கு முன் வைத்திருக்கின்றனர்.

இதில் விஜய் கார்மேல் உட்கார்ந்து கூலிங் கிளாஸ் அணிந்தபடி, கையில் டீ கிளாஸ் உடன் மாஸாக கெத்து காட்டி இருக்கிறார். இப்படி ராட்சச கட்டவுட்டுகள் அனைத்து திரையரங்களிலும், நகரங்களின் முக்கிய பகுதிகளிலும் வைத்து வாரிசு பட ப்ரொமோஷனை துவங்கியுள்ளனர். இந்த பேனர்களை சென்னை சத்தியம் மற்றும் கமலா தியேட்டர்களில் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

இதை எல்லாம் பார்க்கும் தளபதி ரசிகர்களுக்கு வாரிசு படத்தை குறித்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்து இருக்கிறது. அதேபோன்று பொங்கல் தினம் என்னைக்கு வரும் என ஒவ்வொரு நாளையும் ரசிகர் கூட்டம் விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறது.

மேலும் இந்த போஸ்டரில் இருக்கும் விஜய்யின் லுக் ஏற்கனவே தெறி படத்தில் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் லுக் போல இருக்கிறது. இருப்பினும் வாரிசு படம் பக்கா சென்டிமென்ட் படம் என்பதால் புதுவிதமாக விஜய்யை இந்த படத்தில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் தமிழகத்தில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை சேர்ந்த லலித் குமார் பெற்றிருக்கிறார். ஆகையால் வசூலில் மாஸ் காட்ட வேண்டும் என லலித் பக்கா பிளான் போட்டு பட ப்ரொமோஷனை கட் அவுட் அடித்து துவங்கி இருக்கிறார்.

வாரிசு படத்தின் பிரம்மாண்ட பேனர்

varisu-cinemapettai
varisu-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →