போட்டி போட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களை கூட்டும் வாரிசு, துணிவு.. கத இல்லனா வெளியில தலை காட்ட முடியாது

இப்பொழுது உள்ள சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து தான் பெரிய ஹீரோ என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் சோசியல் நெட்வொர்க் என்கிற பெயரில் ரசிகர்கள் தனக்குப் பிடித்த நடிகர் நடிகைகளை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் வீடியோக்களைப் பார்ப்பது மற்றும் லைக்ஸ் களை அள்ளிக் கொடுப்பது என்று தினந்தோறும் நடந்து வருகிறது.

அதைப் பயன்படுத்தியும் சில நடிகர்கள் நான்தான் பெரியவன் என்று நிரூபிக்க எனது படத்தின் ட்ரெய்லர் இத்தனை மணி நேரத்தில் இவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் நான்தான் நம்பர் ஒன் என்று கூறும் அளவிற்கு ரசிகர்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயல்பல வருடங்களுக்கு மேல் நடந்து வருகிறது.

தற்போது வெளிவந்துள்ள துணிவு, வாரிசு படத்தை டிரெய்லர் காரசாரமான விவாதங்களை பெற்று யாரும் முன்னணி நடிகர் இந்த படம் சிறந்த படம் என்ற பேச்சுக்கள் இருந்து வருகிறது. இதில் துணிவு புத்தாண்டு அன்று வெளிவந்து இதுவரை அஜித் பட வரலாற்றில் முதல் முதலாக அதிகம்பேர் பார்த்துள்ளதாக சாதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்து வாரிசு டிரைலர் அஜித் படத்தை விட ஒரே நாளில் அந்த சாதனையை எட்டியுள்ளது என்பது சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் பொழுது 2.4 கோடி பேர் ஒரு டிரைலரை பார்ப்பார்கள் என்றால் அவர்கள் அனைவரும் படத்தைப் பார்த்தாலே படம் பல மடங்கு லாபத்தை பெற்று வெற்றி பெற்று விடும்.

ஆனால் எதற்காக இதற்கு முன்பு வெளிவந்த பெரிய நடிகர்களின் படங்கள் இதே சாதனையை செய்தது ஆனால் எந்த படங்களுமே வெற்றி அடையவில்லை ஏதோ ஒரு வசூலைப் பெற்று வெற்றி பெற்றது என்று பொய்யாக அறிவிக்கப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக ரஜினி நடித்த அண்ணாத்த, விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த வலிமை எந்த படங்களுமே சிறப்பாக அமையவில்லை.

காரணம் நான் தான் பெரியவன் என்ற அடையாளத்தை காட்ட பணத்தை கொடுத்து இந்த லைக் மற்றும் பார்வையாளர்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். தற்போது உள்ள பெரிய நடிகர்களின் தயாரிப்பாளர்கள் இதை வைத்து படத்தை வெற்றியடைய செய்ய முடியவே முடியாது என்பதற்கு இதற்கு முந்தைய படங்களை சாட்சி, தற்போது இதே நிலையை செய்து வருகிறார்கள். ரசிகர்களை ஏமாற்றி அதிக விலைக்கு டிக்கெட் விலை விற்க இந்த சாதனைகளை பொய்யாக பயன்படுத்தி வருகிறார்கள் எனவே அனைத்து ரசிகர்களும் பணத்தை வார் இழைக்காமல் சாதாரண கட்டணத்தில் படம் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →