கோட் படத்தை பூஸ்ட் பண்ண அஜித்திடம் ரீ ரிலீஸுக்கு பிட்டு போட்ட வெங்கட் பிரபு.. விநாயக் தரிசனம் எப்ப தெரியுமா.?

Actor Ajith: இப்போது ரீ ரிலீஸ் படங்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. வெளிவந்தபோது ஓடாத படங்கள் கூட இப்போது கலெக்சன் பார்த்து விடுகின்றது.

அதனாலேயே தயாரிப்பாளர்கள் இப்போது பழைய ரீலை எல்லாம் தூசி தட்டிக் கொண்டிருக்கின்றனர். அதில் அஜித்தின் மங்காத்தா படமும் ரீ ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு மே ஒன்றாம் தேதி இப்படம் வெளியாகிறது. இதைத்தான் தற்போது அஜித்தின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

மங்காத்தா ரீ ரிலீஸ்

வெங்கட் பிரபு கூட்டணியில் அஜித் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மரண ஹிட் அடித்தது. சொல்லப்போனால் அஜித்துக்கு இப்படம் மிக முக்கியமானது என்பதையும் மறுக்க முடியாது.

தற்போது விஜய்யின் கோட் படத்தில் பிசியாக இருக்கும் வெங்கட் பிரபு மங்காத்தா 2 எடுக்கும் முடிவில் கூட இருக்கிறார். அதன் முன்னோட்டமாக கூட இந்த ரிலீஸ் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் வெங்கட் பிரபு இதை வைத்து கோட் படத்தையும் பிரமோஷன் செய்யும் ஐடியாவில் இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் விநாயக்கின் தரிசனத்திற்காக ரசிகர்கள் இப்போது ஆர்வத்துடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →