ரேசிலிருந்து விலகிய பிரம்மாண்ட படம்.. தப்பிச்சேன் பிழைச்சேன்னு ஆகஸ்ட் 15 கிளியராகும் வெங்கட் பிரபுவின் ரூட்

Venkatprabhu : வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவரது படங்கள் ஓடாத நிலையில், திடீரென விஜய் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

அஜித்துக்கு மங்காத்தா போல் விஜய்க்கு ஒரு ஹிட் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதேபோல் கோட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவில் நடந்து வருகிறது.

விஜய்க்கு அங்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். மேலும் கோட் படத்தை ஆரம்பத்தில் ஆகஸ்ட் 15 வெளியிடலாம் என்று வெங்கட் பிரபு திட்டம் வைத்திருந்தார்.

ரேசிலிருந்து விலகிய புஷ்பா 2

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என கூறப்பட்டது. இப்போது புஷ்பா 2 படத்தின் வேலைகள் நிறைய மீதம் உள்ளதாம். ஆகையால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க உள்ளனர்.

இதுதான் சரியான நேரம் என இப்போது வெங்கட் பிரபு வேகம் எடுத்துள்ளார். அதாவது இரண்டு படங்கள் ஒன்றாக வெளியானால் கண்டிப்பாக வசூல் பாதிக்கும்.

அதுவும் புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்கள் மரண வெய்ட்டிங்கில் உள்ளனர். ஆகையால் கோட் படத்தை பிறகு வெளியிடலாம் என்ற நிலையில் இருந்தனர். ஆனால் இப்போது புஷ்பா 2 ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது.

எனவே நம்ம ரூட் கிளியர் என வெங்கட் பிரபு இப்போது படு பயங்கரமாக கோட் பட வேலையில் இறங்கி இருக்கிறார். இதனால் ஆகஸ்ட் 15 கோட் படம் ரிலீஸாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →