வாடிவாசலை விட்டுக் கொடுத்த சூர்யா.. ராயனை களம் இறக்கும் வெற்றிமாறன்!

vetrimaarans vaadivaasal movie hero suriya to be changed: இயக்குனராக தனது படைப்பைக் காட்சிப்படுத்துவதில் எந்த ஒரு சமரசமும் செய்யாது  நினைத்தவற்றை அப்படியே பார்வையாளர்களின்  கண்களுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக்கும்  வெற்றிமாறனின் படைப்பு ஒவ்வொரு ரசிகனுக்கும்  பாடமே!

பாலு மகேந்திராவின் கதை நேரம் நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக  பணிபுரிந்து அதன் மூலம் திரைத்துறைக்குள் என்ற  என்ட்ரி ஆனவர் இயக்குனர் வெற்றிமாறன்.  பொல்லாதவனில் ஆரம்பித்த இவரது பயணம் விடுதலை வரை என் வழி தனி வழி என்பது போல் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் இயக்கம் விடுதலை இரண்டாம் பாகம் வெளிவருவதற்கு முன்பே சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது.  இவரின் அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் கதை கேட்டு வந்த நிலையில்  வாடிவாசலை இயக்குவது பற்றி முடிவெடுத்துள்ளார் வெற்றி மாறன்.

தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் உருவாக இருந்தது வாடிவாசல் இதற்காக சில வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் சூட் முதலான அனைத்தையும் மேற்கொண்டார் இயக்குனர் வெற்றிமாறன்.

இது தொடர்பாக ரொம்ப நாள் கழிச்சு சூர்யா வெற்றிமாறன் மீட் பண்ணி இருக்கிறார்கள் சும்மா ரெண்டு மணி நேரம்  சந்திப்பில் வாடிவாசல் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்  சூர்யா.

சூர்யா தற்போது சரித்திர படங்கள் மற்றும் பான் இந்தியா மூவியாக தேர்ந்தெடுத்து  நடித்து வந்தாலும்,  ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாவதால் இவரது ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்நோக்கி இருந்த வேளையில் இந்த செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால் வெற்றிமாறனின் அடுத்த சாய்ஸ் யார் என்றால் தனது ஆஸ்தான பேவரைட் ஹீரோ தனுஷ்தானாம். இது பற்றி மனம் திறந்த இயக்குனர் சூர்யா இல்லன்னு சொன்னது வருத்தம் தான். ஆனால் தனுஷ் உள்ள வர்றது படம் வேற லெவல்ல ஹிட் ஆக போகுது என்று பெருமை பொங்க கூறியுள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →