விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஒரே நாளில் ரிலீஸ்.. வாய்ப்பு இருக்கா.?

Ajith : இந்த வருடம் 2024 ஆம் ஆண்டு அஜித்தின் ஒரு படம் கூட வெளியாகாதது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்கள் முழுக்க அஜித்தின் புகைப்படங்கள் மையம் கொண்டிருந்தாலும் அவருடைய படம் எதுவும் வெளியாகாதது மிகப்பெரிய அதிருப்திதான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அஜித்தின் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படம் அறிவிப்பு வெளியான போதே அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்தனர்.

ஆனால் சமீபத்தில் விடாமுயற்சி டீசர் வெளியான நிலையில் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக கூறியுள்ளனர். ஒருபுறம் குட் பேட் அக்லி படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. எப்படியும் இந்த டிசம்பருக்குள் இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்து விடுவார்கள்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஒரே நாளில் ரிலீஸ்

ஏனென்றால் அடுத்த ஆண்டு அஜித் கார் ரேஸ் மற்றும் பைக் சுற்றுப்பயணம் ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்நிலையில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ஒரே நாளில் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்று தான் அஜித் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் ஒரு பெரிய நடிகரின் படம் ஒரே நாளில் வெளியானால் கண்டிப்பாக வசூல் பெரியளவு பாதிக்கும். அதோடு அஜித்தும் இதற்கு சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறிதான். மற்ற நடிகர்களுடன் போட்டி போட தான் அஜித் எப்போதும் விரும்புவார்.

ஆகையால் இந்த பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி படம் தான் வெளியாக இருக்கிறது. சற்று கால தாமதமாக குட் பேட் அக்லி படம் வெளியிட உள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment