தனுஷை புகழ்ந்த இயக்குனர்கள்.. விக்கி கொடுத்த ரியாக்சன், கேமராவ இன்னும் சூம் பண்ணுங்கப்பா!

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்றே தன்னுடைய twitter அக்கவுண்ட் டிஆக்டிவேட் செய்தது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. விக்னேஷ் சிவன் எப்போதுமே இணையதளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

உண்மையை சொல்லப்போனால் நயன்தாராவை இந்த சமூக வலைத்தளத்திற்குள் கொண்டு வந்ததே விக்னேஷ் சிவன் என்று கூட சொல்லலாம். தனுஷ் மற்றும் நயன்தாராவின் பிரச்சனையில் விக்னேஷ் சிவன் பெரிய அளவில் விமர்சிக்கப்படுவதால் இது நடந்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பான் இந்தியா இயக்குனர்கள் ரவுண்ட் டேபிள் கான்ஃபரன்ஸ் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக 2022-ல் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தான் ரிலீஸ் ஆனது.

விக்கி கொடுத்த ரியாக்சன்

அவர் இந்த இயக்குனர்களுடன் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது போல் பெரிய அளவில் கிண்டலும் கேலியும் பேசப்பட்டது. இதனால்தான் ட்விட்டரை விட்டு விலகி விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

விக்னேஷ் சிவன் விலகி இருந்தாலும் அவருடைய வீடியோ ஒன்று பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. அந்த youtube சேனலில் இயக்குனர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வாத்தி பட இயக்குனர் வெங்கட் அல்லூரி தன்னுடைய படம் தெலுங்கு ஹீரோக்களால் பெரிய அளவில் ரிஜெக்ட் செய்யப்பட்டதாகவும் தனுஷ் கதை கேட்டு உடனே ஓகே சொன்னதாகவும் புகழ்ந்து பேசி இருந்தார்.

wikki
wikki

அது மட்டும் இல்லாமல் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படம் ரிலீஸ் ஆவதற்கு 11 மாதங்களுக்கு முன்பே தனுஷ் தன்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார் என்றும் புகழ்ந்து பேசியிருந்தார். கருப்பன் குசும்புக்காரன் என்று சூரி சொல்லும் வசனம் போல் இவர்கள் இருவரும் தனுஷை புகழ்ந்து பேசும்போது கேமரா மேன் விக்னேஷ் சிவன் முகத்தை ஜூம் பண்ணியிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் தர்ம சங்கடமான சூழ்நிலையில் உட்கார்ந்து இருப்பது போல் தன்னுடைய முகத்தை இறுக்கமாக வைத்திருப்பதை பற்றி இணையதளத்தில் பேசி வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment