விஜய் ரசிகர்களால் பயந்துபோய் பாதியிலேயே ஓடிய பிரபல நடிகர்.. விஜய் சார்கிட்ட கொஞ்சம் பார்த்து நடிங்க பாஸ்

பொதுவாகவே தளபதி விஜய்யை பற்றி பொது வெளியிலும் திரைப்படங்களிலும் அவதூறாக பேசினால் விஜயின் ரசிகர்கள் எந்த எல்லைக்கும் சென்று விடுவார்கள். அவ்வளவு அன்பு வைத்திருக்கும் விஜய் ரசிகர்களை பார்த்து விஜயின் படத்தில் நடித்த பிரபலம் ஒருவர் தியேட்டரை விட்டே ஓடி விட்டார் அவர் யார் என்பதை பார்க்கலாம்.

2001ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவியின் ஷாஜகான் திரைப்படத்தில் தளபதி விஜய், ரிச்சா பல்லோட் திவாகரன் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படத்தில் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். மணிசர்மா இசையில் உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே இத்திரைப்படத்தில் விஜய் கதாநாயகியான ரிச்சாவை ஒன் சைடாக காதலிப்பார். அதேபோல விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்த கிருஷ்ணனும் கதாநாயகியை காதலிப்பார். தன்னுடைய காதலை வெளியில் சொன்னால் பிரச்சினை ஆகி விடுமோ என்ற பயத்தில் தளபதி விஜய் கதாநாயகியிடம் தன் நண்பனுக்காக கடைசிவரை காதலை சொல்லாமல் இருப்பார்.

இதை தெரியாத விஜயின் நண்பரும் கதாநாயகியும் காதலில் சேர டிடெயில் டிப்ஸ் கொடுத்து உதவுவார். கடைசியில் கிளைமாக்ஸில் விஜயே இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார். அதற்கு காரணமான கிருஷ்ணனை ரசிகர்கள் அப்போது பயங்கரமாக கரிச்சி கொட்டுவார்கள். விஜய்யின் காதலியை காதலிப்பதற்கு தைரியமா உனக்கு என்று சீரியசாக கிருஷ்ணனை விஜய் ரசிகர்கள் திட்டித் தீர்ப்பர்.

இந்த நிலையில் ஒருமுறை சென்னையில் இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்ற திவாகரன் கிருஷ்ணனை விஜயின் ரசிகர்கள் கோபத்துடன் தன்னை பார்த்ததாகவும், அதனால் பதறிப் போனதாகவும் தெரிவித்துள்ளார். அழகும், திறமையும் இருந்தும் இத்திரைப்படத்திற்கு பின் நடந்த சம்பவத்தால் திவாகரன் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் நடிப்பதையே விட்டு வெளியேறினார்.

முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தின் கதையை, கதையாக பார்க்காமல் சீரியஸாக பார்த்து இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது தவறு என்று பல தரப்பினர் கூறி வந்தாலும் இன்று வரை இதனை செய்கின்றனர். சமீபத்தில் கூட விஜய் நடித்த பிஸ்ட் திரைப்படம் சரியாக ஓடாத நிலையில் கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்களை ஏற்றிவிட்டு பார்த்துள்ளனர் நெட்டிசன்கள். இதுகுறித்த சண்டைகள் சமூக வலைத்தளங்களில் நடைபெற்றுக் கொண்டே வரும் நிலையில் இது எங்கே போய் முடியப் போகிறது என்று தெரியவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →