விஜய், அஜித் நினைத்தால் தான் அவர்களை காப்பாற்ற முடியும்.. கோரிக்கை வைத்த பிரபலம்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இந்த இரு ரசிகர்கள் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் நிலவும். தற்போது அதற்கு ஒரு படி மேலாக சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாக மோதிக்கொள்கிறார்கள்.

அஜித் ரசிகர்கள் விஜய்யை கேவலப்படுத்தும் அளவுக்கு புகைப்படங்களும், விஜய் ரசிகர்கள் அஜித்தை கேவலப்படுத்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இதை இவர்களோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களது குடும்பங்களையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் எல்லைமீறிய இந்த செயலால் பல பிரபலங்கள் ரசிகர்களை நினைத்து வேதனையாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரி வாசுகி பாஸ்கர் கூட ஒரு டுவிட் செய்திருந்தார்.

இதுபோன்ற பிரச்சினையை தீர்க்க ஒரே வழி அஜித் மற்றும் விஜய் இருவரால் மட்டுமே முடியும் என கூறியிருந்தார். இந்த ஆரோக்கியமற்ற மோதலுக்கு இவர்களால் மட்டுமே முற்றுப்புள்ளி வைக்க முடியும் என கூறியிருந்தார். இவர்களின் ரசிகர்கள் இது போன்ற அசிங்கமாக நடந்து கொண்டால் அவர்களை மீது சைபர் கிரைமில் புகார் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல் இங்கேயே இதற்கு தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளார். சமீபத்தில் கூட அஜித் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம். அஜித்குமார் அல்லது ஏகே என்று சொன்னால் போதும் என ஒரு அறிக்கை விட்டிருந்தார்.

அவரின் சொல்லை ஏற்று அவரது ரசிகர்கள் தற்போது தல என்று அழைப்பதில்லை. தற்போது அதேபோல் விஜய் மற்றும் அஜித் இருவரும் அவர்களது ரசிகர்களுக்கு இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறினால் நிச்சயம் அதை கடைபிடிக்க வாய்ப்புள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →