விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலைமை.. மலேசியாவில் இருந்து வெளியிட்ட வைரல் ட்விட்டர் பதிவு

கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது. அந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தினால் தற்போது விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் உடல் நலத்தை குறித்து அப்டேட் செய்திருக்கிறார். இவருடைய இந்த ட்விட்டர் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. பிச்சைக்காரன் 2 படத்திற்காக மலேசியாவின் லங்கா தீவில் கடலில் சேஸிங் செய்யும் காட்சியை படமாக்கப்படும் போது திடீரென்று விபத்து ஏற்பட்டது.

அப்போது படகு கடலில் மூழ்கியது. இதில் படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு மூக்கு மற்றும் தாடை பகுதியில் கடுமையான காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக அந்த ஆப்ரேஷன் நிறைவடைந்ததாகவும் சீக்கிரம் ரசிகர்களிடம் பேச முயற்சிக்கின்றேன் என்றும் மலேசியா மருத்துவமனையில் இருந்து கையை உயர்த்தி காட்டியபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய நிலையை குறித்து ட்விட் செய்திருக்கிறார்.

மலேசியாவில் இருந்து விஜய் ஆண்டனி வெளியிட்ட வைரல் ட்விட்டர் பதிவு

vijay-antony-twit

vijay-antony-cinemapettai
vijay-antony-cinemapettai

இவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் விஜய் ஆண்டனி விரைவில் குணமடைந்து இந்தியா திரும்ப வேண்டிக் கொள்வதாகவும் சோசியல் மீடியாவில் கருத்து பதிவிடுகின்றனர். விஜய் ஆண்டனியின் குடும்பமும் தற்போது சென்னையில் இருந்து கிளம்பி மலேசியா சென்றுள்ளது.

தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் விஜய் ஆண்டனி விரைவில் தன் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும், இவ்வளவு அன்பு மற்றும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →