வீட்டை விட்டு துரத்திய விஜய், இப்படி ஒரு நிலை உங்களுக்கு வராமலா போகும்… சாபம் விட்ட தயாரிப்பாளர்

விஜய் தனது பெற்றோரை ஒதுக்கி வைத்துள்ளது சில வருடங்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் எஸ்ஏசி ஆரம்பத்தில் விஜயின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை செய்துள்ளார். ஆனால் விஜய்க்கு தெரியாமலேயே அவருடைய பெயரை பயன்படுத்தி கட்சி தொடங்க முற்பட்டார்.

இதன் விளைவு காரணமாக எஸ்ஏசி மீது விஜய் கோபப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜயின் பெற்றோர்கள் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் வணக்கம் வைத்த விஜய் தனது பெற்றோரைப் பார்த்து கண்டும் காணாமல் சென்றார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இது குறித்து தயாரிப்பாளர் கே ராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது ஆடியோ லான்ச்சில் மதிக்காததை பற்றி பேசுகிறீர்கள், நான் அவர்களை விஜய் வீட்டை விட்டு துரத்தியதை நினைத்து மன கஷ்டத்துடன் உள்ளேன். ஆரம்பத்தில் எஸ்ஏசி தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று இரண்டு படத்தை இயக்கினார்.

ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் தனது மகனுக்காக சிபாரிசு செய்தார். கடைசியில் விஜய்க்கு பெயரை வாங்கி கொடுத்த காதலுக்கு மரியாதை படத்தை வாங்கி தந்ததும் எஸ்ஏசி தான். பெற்றோர்களின் 60வது கல்யாணத்தை பிள்ளைகள் நடத்தி வைக்க வேண்டும்.

அதுவே 80வது கல்யாணத்தை பிள்ளைகளுடன் பேரப்பிள்ளைகளும் சேர்ந்து நடத்த வேண்டும். ஆனால் இந்த கொடுப்பினை எனது நண்பர் எஸ்ஏசிக்கு கிடைக்கவில்லை. விஜய்க்கு மட்டுமில்லை எல்லோருக்கும் சொல்கிறேன், பெற்றோர்களை துரத்தி விட்ட பிள்ளைகளுக்கு அதே நிலைமை அவர்களது குழந்தைகளால் ஏற்படும்.

கண்டிப்பாக இந்த நிலைமை விஜய்க்கும் ஏற்படும் என்பது போல சாபம் விடும் அளவுக்கு கே ராஜன் பேசி இருந்தார். அதுமட்டுமின்றி பெற்றோர்களை மதிக்கத் தெரியாத இவர் தனது ரசிகர்களுக்கு வேற அறிவுரை சொல்கிறார் என்று விஜய்யை கே ராஜன் விமர்சனம் செய்துள்ளார். இதனால் அவர் மீது விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →