டேட்டிங் முடிஞ்சு திருமணத்திற்கு ஓகே சொன்ன விஜய் தேவர கொண்டா.. வலையில் சிக்கிய டாப் நடிகை

தெலுங்கு திரையுலகில் இளம் நாயகனாக வலம் வரும் விஜய் தேவர கொண்டாவுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனால் மன வருத்தத்தில் இருக்கும் அவர் தற்போது தன் காதலியுடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். எத்தனையோ நடிகைகளுடன் இவர் நடித்திருந்தாலும் நடிகை ராஷ்மிகாவுடன் இவருக்கு இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்த இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒரு செய்தியும் பரவி வருகிறது.

அதை நிரூபிப்பது போல் இவர்கள் பொது இடங்களில் சுற்றி தெரியும் போட்டோக்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் மாலத்தீவில் விடுமுறையை என்ஜாய் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்களாம்.

ஏனென்றால் விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு ராசியான பெண்ணாக இருக்கிறாராம். அதனால் அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கும் விஜய் தேவரகொண்டா அவரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே ஆழ்மனதில் காதலை தேக்கி வைத்திருந்த ராஷ்மிகா அவர் கேட்டதும் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே டேட்டிங் செய்து ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டுள்ள இந்த ஜோடி விரைவில் திருமண பந்தத்தில் இணையவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த திருமண அறிவிப்புடன் சேர்த்து அவர்கள் இருவரும் இணையும் பட அறிவிப்பையும் வெளியிட விஜய் தேவரகொண்டா திட்டமிட்டுள்ளாராம். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கும் ராஷ்மிகா இந்த திருமண அறிவிப்பை சரியான நாள் பார்த்து வெளியிட காதலருக்கு கட்டளை இட்டு இருக்கிறாராம். அந்த வகையில் தற்போது திரையுலகில் அடுத்த நட்சத்திர ஜோடி தயாராகிவிட்டனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →