சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாசாக இருக்கும் தளபதி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள் நடித்து வரும் இந்த படம் பற்றிய செய்தி தான் இப்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

தற்போது காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 500 பேருக்கு மேல் கலந்து கொண்ட அந்த ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அனைத்தும் ஏற்கனவே வைரலாகி வந்தது. அதிலும் விஜய் உட்பட படகுழுவினர் அனைவரும் நெருப்பை மூட்டி குளிர் காய்வது போல் வெளியான போட்டோ பயங்கர ட்ரெண்டானது.

அதைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போட்டோவும் வெளியாகியுள்ளது. அதிலும் விஜய் அந்த போட்டோவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும் அவருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ், சஞ்சய் தத் உட்பட பலர் இருக்கின்றனர்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாசாக இருக்கும் தளபதி

leo-vijay
leo-vijay

ஏற்கனவே கடுமையான குளிரில் படக்குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என செய்திகள் வெளிவந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் மிஷ்கினும் அது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோவில் விஜய் சற்று உடல் இளைத்தது போன்று காணப்படுகிறார்.

இது படத்திற்கான தோற்றமா அல்லது காஷ்மீர் குளிர் அவரை வாட்டி எடுக்கிறதா என்ற ரீதியிலும் பேச்சுக்கள் கிளப்பியுள்ளது. இருப்பினும் அவருடைய இந்த லுக் செம மாஸாக இருக்கிறது. இதுவே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

லியோ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

vijay-leo
vijay-leo
vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →