GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை, வெங்கட் பிரபு பேட்டி.. இப்போ இதெல்லாம் தேவையா டைரக்டர்?

GOAT: இயக்குனர் வெங்கட் பிரபு மஜாவான ஆள் என்று எல்லோருக்கும் தெரியும். பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் பொழுது கொஞ்சம் நாவடக்கம் இருந்தால் சரியாக இருக்கும். வழக்கம் போல தான் கொடுக்கும் பேட்டிகளில் குஷியாக உண்மையை உளறி விடுகிறார் GOAT பட டைரக்டர்.

விஜய் அடுத்து வெங்கட் பிரபுவுடன் படம் பண்ணப் போகிறார் என்று அரசியல் புறசலாக செய்தி வரும்போது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதையும் தாண்டி அதிகாரப்பூர்வமாக இந்த படத்தின் அறிவிப்பும் வந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை

இந்த நிலையில் தான் கடந்த வார பேட்டி ஒன்றில் கோட் படத்தின் மொத்த கதையையும் சொல்லி வைத்திருந்தார் வெங்கட் பிரபு. அது மட்டுமில்லாமல் தற்போது இந்த படத்தில் தன்னுடைய முதல் சாய்ஸ் விஜய் இல்லை என்று வேறு சொல்லி இருக்கிறார்.

கோட் படம் முதலில் வெங்கட் பிரபு எழுதும் பொழுது அதை விஜய்க்காக என்று எழுதவில்லை. ஒரு பெரிய நடிகர் மற்றும் இளம் நடிகர் ஒருவர் என்று மனதிற்குள் பிக்ஸ் செய்துவிட்டு எழுதி இருக்கிறார். அதன்பின்னர் இந்த கதையில் ரஜினி மற்றும் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.

இந்த படம் கொரோனா லாக்டவுன் சமயத்தில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்த கதை எப்படியோ விஜய்க்கு என்று இருந்திருக்கிறது. தற்போது படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கும் ரெடியாகிவிட்டது.

வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற பல வருடங்கள் கழித்து தான் இந்த படத்தில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான் என வெளியில் சொல்வார்கள். ஆனால் வெங்கட் பிரபு ரிலீசுக்கு முன்னரே விஜய் என்னுடைய ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை என சொல்லி இருப்பது சினிமா வட்டாரத்தில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →