பாண்டிச்சேரி முதல்வருக்காக கொள்கையை மாற்றிய தளபதி.. இதுல கூட ஒரு அரசியல் கூத்து இருக்கு!

தமிழ் திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் நடிகர் விஜய்யின் சந்திப்பு பற்றி தான். சில நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் சென்னை நீலாங்கரை அடுத்துள்ள விஜய்யின் பண்ணை வீட்டில் சந்தித்தனர்.

இது குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றும், வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் பாண்டிச்சேரி முதல்வர் திடீரென நடிகர் விஜய்யை சந்தித்ததற்கு பின்னணியில் சில அரசியல் காரணங்கள் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது நடிகர் விஜய் யாருடனாவது சேர்த்து போட்டோ எடுத்தால் அதை வெளியே விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்வார்.

சமீபத்தில்கூட சினிமா துறையின் பிரபல பைனான்சியர் அன்புசெழியன் விஜய் வீட்டிற்கு பத்திரிக்கை வைக்க சென்றார். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் வெளியில் விட வேண்டாம் என்று கேட்டுள்ளார். இதுபோன்ற கொள்கையை விஜய் அனைவரிடமும் கடைப்பிடிப்பது வழக்கம்.

ஆனால் பாண்டிச்சேரி முதல்வருடன் நடந்த சந்திப்பு போட்டோ மட்டும் மீடியாவில் உடனடியாக வெளியாகியுள்ளது. தற்போது இந்த விஷயம் தான் அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அந்த போட்டோவில் விஜய் அணிந்திருந்த உடையும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இது அரசியலின் அடுத்த கட்டத்திற்கான ஆரம்பமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுவதால் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருந்தது. இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த வருடம் நடந்த தேர்தலில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் விஜய் மக்கள் இயக்கம் அதிகமான வெற்றிகளை பெற்றது.

இந்நிலையில் தற்போது நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னும் அரசியல் காரணங்கள் இருக்கிறதா என்பது போன்ற பல்வேறு கேள்வியும், எதிர்பார்ப்புகளும் விஜய் ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →