தேடி வந்த வாய்ப்பை நழுவ விட்ட விஜய்.. கப்புனு கெட்டியா பிடித்துக் கொண்ட அஜித்

ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும். இதில் முக்கியமாக லோகேஷ் கனகராஜ் போட்டியான ஒரு இயக்குனரை படம் பண்ண வைக்க வேண்டும் என்று அஜித் இருக்கிறார்.

இந்த சமயத்தில் மகிழ் திருமேனி எப்படியோ அஜித்தை சந்தித்து ஒரு கேங்ஸ்டர் கதையை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார். இந்த கதை மாஸ்டர் படத்திற்கு முன்னதாக விஜய்யிடம் கூறப்பட்ட கதையாகும். விஜய் உடனே படம் பண்ணலாம் என்று கூப்பிட்டார்.

ஆனால் மகிழ் திருமேனி அப்பொழுது உதயநிதியிடம் ஒரு படம் பண்ண கமிட்டாகி உள்ளேன். அதை முடித்து விட்டு வருகிறேன் என்று சென்று விட்டார். விஜய் வேறு வழியில் சென்று விட்டார். இப்பொழுது அந்த கதையை அஜித்திடம் சொல்லி உடனே சம்மதம் பெற்றுவிட்டார்.

இந்த படத்தை எடுத்தால் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜன் படத்திற்க்கு இணையாக இருக்கும் என கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு விஜய் தவறவிட்ட கதையை தற்போது அஜித் கப்புனு பிடித்துக் கொண்டார். ஆகையால் தளபதி 62 படத்தை இயக்குவதற்கு மகிழ் திருமேனிக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

மேலும் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் மிரட்டப் போகிறார். ஏனென்றால் இந்த படத்தின் டைட்டில் மற்றும் வெளியிட்டு தேதியுடன் வெளியான ப்ரோமோ வீடியோ நேற்று வெளியாகி சோசியல் மீடியாவை ரணகளம் செய்து கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை பார்த்த அஜித் நிச்சயம் ஏகே 62 படத்தை லியோவை ஓரம் கட்டும் அளவுக்கு எடுக்க வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார். சீக்கிரம் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி கூடிய விரைவில் படப்பிடிப்பையும் துவங்கப் போகின்றனர். படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவில் படக்குழு திட்டமிட்டுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →