சரண்யா அம்மாவாக நடிக்காத ஒரே டாப் ஹீரோ.. அடுத்த வாய்ப்பு கிடைச்சா தேசிய விருது கன்பார்ம்

மிக பிரபலமான நடிகை சரண்யா ஒரு டாப் ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையையும், இதுவரை அவருடன் நடிக்கவில்லை என்ற ஏக்கத்தையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும் என்றாவது ஒரு நாள் நடித்து விட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நடிகர் டாப் ஹீரோவுடன் நடிக்காத நடிகைகள் என்று யாரும் இல்லை. சங்கவி, ஷாலினி, ரம்பா, தேவயானி, ஜோதிகா, சிம்ரன், சினேகா என அன்றைய டாப் ஹீரோயின்களில் இருந்து அசின், த்ரிஷா, ஹன்சிகா, சமந்தா, நயன்தாரா, என எல்லா நடிகைகளும் நடித்து விட்டார். ஆனால் 90ஸ் கதாநாயகி ஒருவர் விஜய்யுடன் நடிக்க இன்னும் ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்.

நடிகர்கள் ஜீவா, பரத், விஷ்ணு விஷால், SJ சூர்யா, கதிர், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், மாதவன், விமல், உதயநிதி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என டாப் ஹீரோக்கள் அனைவருக்கும் அம்மாவாக நடித்த 90ஸ் கதாநாயகி சரண்யா பொன்வண்ணனுக்கு நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை என்றும், கன்பார்ம் ஒரு நாள் அது நடக்கும் என சொல்லியிருக்கிறார்.

1987 ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான நாயகனில் ஹீரோயினாக நடித்தவர் தான் சரண்யா. இவர் 80ஸ், 90ஸ் காலங்களில் பிரபு, கார்த்திக்குடன் கதாநாயகியாக படங்கள் பண்ணி இருக்கிறார்.

இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்ட பின் படங்களில் நடிப்பதையே நிறுத்திக் கொண்டார். 2003 ஆம் ஆண்டு அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால் இயக்குனர் 2005 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த ராம் படத்தில் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் ஆரம்பித்தார்.

கோலிவுட்டில் கதாநாயகர்களுக்கு அம்மா என்றாலே இப்போது சரண்யா தான். எந்த ஒரு ஆரவாரமான நடிப்பும், ஒப்பனையும் இல்லாமல் எதார்த்தமான நம் வீடுகளில் இருக்கும் அம்மாவை கண் முன் நிறுத்துவார் இவர். கதாநாயாகியாக இருந்ததை விட அம்மாவாக நடிக்க ஆரம்பித்ததற்கு பிறகு பல அவார்டுகளையும், தேசிய விருதையும் வாங்கினார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →