மனைவி சங்கீதா பெயரில் விஜய் ஆரம்பித்த கல்யாண மண்டபம்.. ஒரு நாள் வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Sangeetha Marriage Hall: தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக தன்னை ஒரு முன்னணி ஹீரோவாக நிலை நிறுத்தி கொண்டிருக்கிறார் தளபதி விஜய். கோலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருக்கும் விஜய்யின் சம்பளம் தற்போது 150 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சமயத்தில் அவர் கட்சியை தொடங்கி, சினிமாவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்து இருக்கிறார்.

விஜய்க்கு சினிமா மட்டும் இல்லாமல் சொந்த தொழில் நிறையவே இருக்கிறது. பினாமி பெயரில் நிறைய பிஸினஸ்களை அவர் நடத்தி வருவதாக செய்திகள் வெளியானாலும், எல்லோருக்கும் தெரிந்து பெரிய அளவில் நடத்தி கொண்டிருக்கும் தொழில் கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விடுவதுதான். அவருடைய அம்மா ஷோபா மற்றும் மனைவி சங்கீதா பெயரில் கல்யாண மண்டபங்களை கட்டி இருக்கிறார்.

சென்னையில் உள்ள போரூரில் சங்கீதா கல்யாண மண்டபம் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 350 முதல் 1500 பேர் கூடும் அளவிற்கு இட வசதி உள்ள இந்த மண்டபத்தில் 8 தனி அறைகள் இருக்கிறதாம். மண்டபம் மட்டுமே வாடகைக்கு விடப்படும் நிலையில், சமையல், DJ போன்றவை நாமே செட் பண்ணி கொள்ளலாம்.

சங்கீதா மண்டபத்தின் முழு நாள் வாடகை 2,30,000 ஆகும். பாதி நாள் மட்டும் போதுமென்றால் 90,000 வாடகையாக பெறப்படுகிறது. 1,50,000 ரூபாயை முன்பணமாக செலுத்த வேண்டுமாம். அதிலும் முழுத்தொகையும் பணமாக கைகளில் கொடுக்க வேண்டுமாம். ஆன்லைன் பரிவர்த்தனைகள் எதுவும் கிடையாதாம். 18 சதவீத GST நாம் தான் கட்ட வேண்டும் என்ற அளவிற்கு காஸ்ட்லியான மண்டபமாக இருக்கிறது.

 

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →