ஸ்காட்லாந்து போலீசுக்கே சவால் விட்ட விஜய்யின் போட்டோ.. வெங்கட் பிரபுவால் மாட்டிக் கொண்ட தளபதி

காலம் விஜய் மற்றும் ரஜினி இருவரையும் போட்டியாளர்களாக மாற்றியது. அஜித், விஜய் என்று இருந்த இந்த போட்டி இன்று விஜய்யையும், ரஜினியையும் மோத செய்தது. அஜித்துக்கு சினிமா ஒரு ஹாபி, நேரம் கிடைத்தால் நடிப்பார், இப்படி அவருடைய கேரியர் சென்றதால் இது மாறியது.

ரஜினியை பார்த்து வளர்ந்தவர் விஜய். ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் போட்டியாளர்கள் இல்லை என்பதை மாறி மாறி பேசிவிட்டு ஒருவரது படங்களை மற்றொருவர் ரசிக்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது ரஜினியின் வேட்டையன் படம் ரிலீசானதை ஒட்டி விஜய் திருவல்லிக்கேணி தேவி தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார்.

ரஜினி படத்தை ரசித்துப் பார்ப்பதற்காகவே சென்றுள்ளார். பக்கத்திலேயே சத்தியம் தியேட்டர் நல்ல வசதிகளுடன் இருந்தும் கூட விஜய் தேவி தியேட்டரில் படம் பார்க்கும் பழக்கத்தை நீண்ட நாட்களாக பின்பற்றியுள்ளார். தேவி தியேட்டரில் எமர்ஜென்சி வழியாக சென்று பாக்சில் அமர்ந்து பார்ப்பாராம். இப்படி இவர் நிறைய படங்களை பார்த்துள்ளார்.

இப்படித்தான் நேற்றும் கூட ரஜினியின் வேட்டையன் படத்திற்கு சென்றுள்ளார். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டு காரை சரியாக எமர்ஜென்சி கேட் அருகில் கொண்டு வந்து உள்ளே நுழைந்துள்ளார். ஆனால் அதையும் ஸ்காட்லாந்து போலீசுக்கு சவால் விடும் வகையில் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி விட்டனர்..

விஜய் தான் படம் பார்க்க வந்துள்ளார் என்பதை எளிதாக கண்டுபிடித்துள்ளனர். தளபதி கூடவே வெங்கட் பிரபுவையும் அழைத்து வந்துள்ளார். தேவி தியேட்டரில் பாக்சில் அமர்ந்து பார்த்தால் அருகில் யார் இருக்கிறார் என்பது கூட தெரியாதாம். இதனால் விஜய் அந்த தியேட்டரில் படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment