Vijay Sethupathi: ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் விஜய் சேதுபதியின் 51வது பட போஸ்டர்.. ஹீரோயின் யார் தெரியுமா?

விஜய் சேதுபதி இப்போது மகாராஜா, வெற்றிமாறனின் விடுதலை டு மிஷ்கின் ரயில் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார்.

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இவர் சிவகார்த்திகேயனின் எஸ் கே 23 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, பப்லு, ராஜ்குமார் போன்ற பிரபலங்களும் நடிக்கின்றனர்.

7Cs என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படம் கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கான டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஏஸ் என்ற ஆங்கில டைட்டில் வைத்துள்ளனர். ‌

விஜய் சேதுபதியின் ஏஸ் போஸ்டர்

vjs-51
vjs-51

இந்த போஸ்டரில் டைஸ், கார்ட்ஸ், பணம் ஆகியவற்றுக்கு நடுவே விஜய் சேதுபதி சிகரெட் குடிப்பது போல போஸ்டர் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம் போல இந்தப் படத்தின் கதைக்களமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு ஐஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கும் நிலையில் கரண் பகவதூர் ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என படக்குழு தரப்பில் இருந்த கூறப்படுகிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் சமீப காலமாக வரவேற்பு பெறாத நிலையில் இந்த படம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →