திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவனை அலட் விஜய் சேதுபதி.. பலமுறை சொல்லியும் கேட்கல

விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்சேதுபதி இருவரது கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான், காத்துவாக்குல 2 காதல் என்ற இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திலும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருந்ததால் தன்னுடைய இயல்பான நடிப்பு வெளி காட்டியிருப்பார்.

இதனால் இவர்களுக்கு இடையே சினிமாவைத் தாண்டிய நட்பு நிலவி வருகிறது. விஜய் சேதுபதி விக்னேஷுக்கு ஒரு யோசனையை கடந்த சில ஆண்டுகளாகவே கூறியதாக தெரிகிறது. விக்னேஷ் சிவன் எழுதிய ‘போடா போடி’ திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்த படமாம்.

அந்தப்படத்தில் விக்னேஷ் சிவன் காதலை மிகவும் பிரஷ்ஷாக ட்ரெண்ட்டாகவும் காட்டியிருப்பார். இந்தப் படம் என்னதான் வசூல் ரீதியாக பின் தங்கினாலும், இதுவரை வெளியான காதல் திரைப்படங்களில் வித்தியாசமான கண்டன்ட் கொடுத்த படமாகவே அனைவரின் பாராட்டைப் பெற்றது.

ஆகையால் இந்தப் படத்தை ஹிந்தியில் எடுக்க பலமுறை விக்னேஷ் இடம் விஜய்சேதுபதி கூறியிருக்கிறாராம். இன்றைக்கும் இந்த படம் பழசு என்று யாராலும் சொல்ல முடியாது. இப்பவும் செட்டாகும். போய் ஹிந்துவில் எடு என்று சொல்லியிருக்கிறார்.

வருகின்ற ஜூன் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு பாலிவுட்டில் செட்டிலாகும் எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது.

எனவே நயன்தாரா உடனே விக்னேஷ் சிவனும் பாலிவுட்டில் படத்தை எடுக்க அவர் கூடவே கிளம்பி விடு என விஜய் சேதுபதி நாசூக்காக சொல்வார் போலத் தெரிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →