அவசரப்பட்டியே குமாரு.. மேடையில் கெட்ட பழக்கத்தை உளறி சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் பல திரைப்படங்களில் அவரது வசனங்கள் பெருமளவு ரசிகர்களை ஈர்க்கும் என சொல்லலாம். அது ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும் சரி, விஜய் சேதுபதியின் நடிப்பு இன்று வரை ரசிகர்கள் அதிகம் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே விஜய் சேதுபதி அண்மையில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மேடையில் மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் எப்போதும் அமைதியாக இருந்து நடப்பதை கவனிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், தனது மகன் லயோலா கல்லூரியில் பி.ஏ.ஆங்கில இலக்கியம் படித்து வருகிறான் என்றும், இன்ஜினியரிங் படிப்பதாக தன் மகன் சொன்ன போது தான் அதை நிராகரித்துவிட்டு ஆங்கில இலக்கியத்தை தேர்ந்தெடுத்து படிக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார். இலக்கியங்கள் மீது அண்மையில் தனக்கு பற்று அதிகமாக உள்ளதால், அதிகமான திருக்குறள் இலக்கியங்களைக் கற்று வருவதாகவும் விஜய் சேதுபதி மேடையில் பேசினார்.

இந்த நிலையில் தான் மிகவும் ஆசைப்பட்டு சேர நினைத்த கல்லூரி என்றால் அது லயோலா கல்லூரி தான் நான் பன்னிரண்டாம் வகுப்பில் 700மதிப்பெண்கள் மேல் எடுத்த போது லயோலா கல்லூரியில் சேருவதற்காக முயற்சி செய்தேன். அப்போது தன் தந்தையிடம் இக்கல்லூரியில் சேர போவதாகச் சொன்னபோது, தனது தந்தை குடித்துவிட்டு நீ எடுத்த மதிப்பென்னிற்கு உனக்கு அந்த கல்லூரி எல்லாம் கிடைக்காது என சொன்னதாக விஜய் சேதுபதி பேசினார்.

மேலும் பேசிய அவர் தான் தன் தந்தை குடித்து விட்டதாக சொன்னவுடன் நான் குடிக்க மாட்டேன் என நினைக்காதீர்கள் நான் மோசமானவன், எல்லோருக்கும் இன்னொரு பக்கம் உள்ளது. அதே போல எனக்கும் தினமும் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்றும் நான் கஷ்டப்பட்ட காலத்தில் இதுதான் நிம்மதியை கொடுத்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

குடிப்பழக்கம் என்பது தவறான பழக்கம் இதனை எடுத்துக்காட்டாக எடுத்துச் செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தினர். விஜய் சேதுபதி தற்போது பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில், இவரது நடிப்பை பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.இதனிடையே ஒரு கல்லூரி மேடையில் விஜய்சேதுபதி தனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகக் கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →