ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய விஜய்சேதுபதி.. எல்லா காலக்கொடுமை

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே விஜய்சேதுபதி வாய்ப்பு கொடுத்த இயக்குனரை கழட்டிவிட்ட சம்பவம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாமனிதன் திரைப்படத்தில், இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்து உள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி மாமனிதன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முதன்முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

இயக்குனர் சீனு ராமசாமி மாமனிதன் திரைப்படத்தின் கதையை விஜய் சேதுபதியிடம் சொன்னபோது, தனக்கு கால்ஷீட் இல்லை எனவும் வேறொரு நடிகரை வைத்து இத்திரைப்படத்தை இயக்குங்கள் எனவும் சொல்லிவிட்டாராம். இதனால் மனமுடைந்த சீனு ராமசாமி இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளாராம்.

உடனே யுவன் சங்கர் ராஜா விஜய் சேதுபதியிடம் மாமனிதன் திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டாராம். அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் முதன் முதலாக யுவன் சங்கர் ராஜாவும் அவரது தந்தையும் இசைஞானி இளையராஜாவும் ஒன்றாக சேர்ந்து இசை அமைக்கின்றனர். இதனிடையே விஜய்சேதுபதி சரி என்று சொல்லி இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதியிடம் தான் நடிக்க சொன்னபோது ஒப்புக் கொள்ளாமல், யுவன் சங்கர் ராஜா சொன்னவுடன் ஒப்புக்கொண்டதால் வருத்தத்தில் இருந்து உள்ளாராம். ஏனென்றால் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்து விஜய் சேதுபதியை இயக்குனர் சீனு ராமசாமி அறிமுகப்படுத்தினார்.

இத்திரைப்படம் தேசிய விருது பெற்ற நிலையில் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கை ஆரம்பமானது. அது மட்டுமில்லாமல் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தர்மதுரை திரைப்படத்தையும் சீனுராமசாமி இயக்கி இருந்தார். இத்திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் வாய்ப்பளித்த தன்னிடமே கால்ஷீட் இல்லை என்று தெரிவித்த விஜய் சேதுபதியால் சோகத்தில் இருந்தாராம் சீனுராமசாமி.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →