வேதாளம் போல் பழையபடி முருங்கை மரம் ஏறிய விஜய் சேதுபதி.. ராம் சரணுக்கு வைத்த செக்

Vijay Sethupathi : விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டஜன் கணக்கில் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதில் ஒன்று அல்லது இரண்டு ரசிகர்களால் பேசும் படி அமைந்தது. மற்ற படங்கள் எல்லாம் வந்த சுவடு தெரியவில்லை.

இதனால் விஜய் சேதுபதி இப்போது நின்று நிதானமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் முன்பெல்லாம் கேமியோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் என எது வந்தாலும் கால்ஷீட் கொடுத்து நடித்து வந்தார்.

சமீபகாலமாக அதை தவிர்த்து வந்த விஜய் சேதுபதி வேதாளம் போல் பழையபடி முருங்கை மரம் ஏறி உள்ளார். அதாவது இப்போது தெலுங்கில் மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி களம் இறங்க உள்ளார்.

சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி

அதாவது இயக்குனர் புஜ்ஜி பாபு இயக்கத்தில் ராம்சரண் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பவர்ஃபுல் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. ஏற்கனவே மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி மிரள விட்டிருப்பார்.

இதனால் படக்குழு விஜய் சேதுபதியை அணுகி உள்ளனர். ஆனால் அவரும் இந்த படத்திற்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டு அதிர வைத்து விட்டாராம். வில்லன் கேரக்டருக்கு இவ்வளவு கோடி எப்படி கொடுப்பது என படக்குழு வாய் அடைத்து போய் உள்ளது.

எனவே விஜய் சேதுபதி கேட்ட தொகைக்கு அவரை படக்குழு புக் செய்கிறதா அல்லது வேறு நடிகரை படக்குழு அணுக உள்ளனரா என்பது விரைவில் தெரியவரும். விஜய் சேதுபதி இப்போது மகாராஜா, ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →