வில்லன் ரோலில் விஜய் சேதுபதி.. இந்தியா முழுக்க எதிர்பார்ப்பு!

Vijay Sethupathi : தனது கடின உழைப்பால் 2010-ம் ஆண்டு வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி.

பல்வேறு ஹீரோ கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி, முதன்முதலாக “மகாராஜா” படத்தில் அப்பா வேடத்தில் நடித்து தனது நடிப்பு திறமையை ஒரு புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றார். அதற்காக அவருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கியதற்காக, ₹60 கோடி சம்பளம் பெற்றார் என கூறப்படுகிறது. இது தமிழ் சின்னத்திரை வரலாற்றிலேயே பெரிய தொகையாகும்.

விஜய் சேதுபதியின் வில்லன் முகம்

மாஸ்டர், விக்ரம், விக்ரம் வேதா இந்த படங்களில் வில்லனாக நடித்து அசத்திய விஜய் சேதுபதி, சில நாட்களுக்கு முன்பு இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார்.

ஆனால் தற்போது ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கேட்ட போது, பெரிய ஹீரோவின் படம் என்பதால் சற்றும் தயங்காமல் ஒப்புக் கொண்டார் விஜய் சேதுபதி

தெலுங்கு பட நடிகரான பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் ரசிகர்களின் கூட்டம் அதிகமானது. இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் பிரபாஸின் “ஸ்பிரிட்” திரைப்படம் இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 21 கோடி சம்பளம் என தகவல் வெளியானது சினிமாவில் தற்சமயம் இருக்கும் ஹீரோக்களுக்கே சம்பளம் குறைவாக இருக்கும் நிலையில் வில்லன் கதாபாத்திரத்திற்கு சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி.

பிரபாஸ் மற்றும் விஜய்சேதுபதியின் நடிப்பு எப்படி இருக்கும் என இந்தியா முழுக்க எதிர்பார்ப்பு கூடி வருகிறது

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →