துப்பாக்கிகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட விஜய்.. தளபதி 67 போஸ்டரால் அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ்

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் புகழின் உச்சிக்கு சென்றுள்ள லோகேஷ் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படி ஒரு செய்தி வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் இந்த படம் எப்போது ஆரம்பிக்கும் என்று காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

தற்போது விஜய் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு அதெல்லாம் கூட பெரிய விஷயமாக தெரியவில்லை. தளபதி 67 திரைப்படத்தை பற்றிய விவாதம் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. சொல்லப்போனால் வாரிசு திரைப்படத்தை விட தளபதி 67 திரைப்படத்திற்கு தான் இப்போது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதனாலேயே விஜய் ரசிகர்கள் இந்த படம் சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும் வைரல் செய்து வருகின்றனர். அதில் லேட்டஸ்டாக ரசிகர்கள் உருவாக்கிய தளபதி 67 போஸ்டர் ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ரசிகர்கள் உருவாக்கிய ஒரு போஸ்டர் பலரையும் மிரட்டிய நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்த போஸ்டரை பார்த்து படகுழுவே ஆடிப் போயிருக்கிறது.

அதாவது லோகேஷ் திரைப்படம் என்றாலே அதில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது. அது மட்டுமல்லாமல் விதவிதமான துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் என அவருடைய திரைப்படம் பயங்கர மிரட்டலாக இருக்கும். அதிலும் விக்ரம் திரைப்படத்தில் இது ரொம்பவே அதிகமாக இருந்தது. அதைத்தான் ரசிகர்களும் விரும்புகின்றனர்.

அதனாலேயே ரசிகர்கள் அப்படி ஒரு மிரட்டலான போஸ்டரை தயார் செய்துள்ளனர். அந்த வகையில் விஜய் முகத்தில் ரத்த களரியாக போலீசார்களுக்கு நடுவில் சிக்கியிருப்பது போன்று அந்த போஸ்டர் அமைந்துள்ளது. மேலும் சுற்றிலும் போலீசார் கையில் துப்பாக்கியை வைத்தபடி இருக்க, விஜய்யை இரண்டு பேர் வளைத்து பிடித்து இருக்கின்றனர்.

ஆனாலும் அவர் முகத்தில் எந்த ஒரு பயமோ, பதட்டமோ இல்லாமல் மிகவும் கெத்தாக பார்த்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்க்கும் போது கிட்டத்தட்ட ரோலக்ஸ் சூர்யா போன்று தெரிகிறது. அதே தாடி வெள்ளை சட்டை என்று விஜய் மாஸாக இருக்கிறார். ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ள இந்த போஸ்டர் தற்போது அதிக அளவு ஷேர் செய்யப்பட்டு வருகிறது. படத்தின் இயக்குனருக்கு கூட தோன்றாத இந்த விதவிதமான ஐடியாக்களை ரசிகர்கள் செயல்படுத்தி வருவதை பார்த்து லோகேஷே கொஞ்சம் மிரண்டு போய் தான் இருக்கிறாராம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →