சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த விஜய்.. நிராகரிக்க இப்படி ஒரு காரணமா?

சினிமாவை பொறுத்த வரையில் ஒரு நடிகர் நிராகரிக்கும் பட வாய்ப்பு மற்றொரு நடிகருக்கு சூப்பர் ஹிட் படமாகவும் அமைவது சாதாரண ஒன்றுதான். ஆனால் சில சமயங்களில் அந்த நடிகரின் வாழ்க்கையில் புரட்டிப் போடும் விதமாகவும் அந்த படம் அமையக்கூடும். அவ்வாறு சூர்யாவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

விஜய் தற்போது ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற படத்தில் நடித்த வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை விஜய் தவற விட்டுள்ளார்.

அதாவது இப்போது சூர்யா முன்னணி நடிகராக இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் தடுமாறி வந்த நிலையில் அவருக்கு கைகொடுத்த படம் அயன். 2009 ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா ஆகியோர் நடிப்பில் அயன் படம் உருவாகி இருந்தது. இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் நல்ல லாபம் தந்தது. ஆனால் அயன் படத்தின் இயக்குனர் கேவி ஆனந்த் இப்படத்தின் கதை விஷாலை மனதில் வைத்து எழுதப்பட்டதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும் இயக்குனர் விஷால் இடம் செல்லும் போது பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம்.

அதன் பிறகு தான் தளபதி விஜய் இடம் கேவி ஆனந்த் சென்று உள்ளார். விஜய்க்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகமாக இருப்பதால் ஒரு வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் போதை பொருள் கடத்தல் சம்பந்தமான படத்தில் நடிக்க விஜய் விரும்பவில்லை.

இதனால் அயன் படத்தை விஜய் நிராகரித்து விட்டார். அதன் பின்பு தான் சூர்யா அயன் படத்தில் தேர்வாகி நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்த சூர்யா கேவி ஆனந்த் கூட்டணியில் மாற்றான், காப்பான் படங்கள் வெளியாகி இருந்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →