தளபதி விஜய் விவாகரத்தா? கடுப்பில் லண்டன் சென்ற மனைவி சங்கீதா, வெளிவரப்போகும் அதிர்ச்சி தகவல்

நடிகர் விஜய் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு கலந்துக் கொண்டாலும் எப்போதும் தன்னுடன் தனது தாய், தந்தை, மனைவி என அனைவருடனும் கலந்துக்கொள்வார். முக்கியமாக அவரது படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகள், வெற்றி விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்துக்கொள்வார் விஜய். ஆனால் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோரிடம் விஜய்க்கு மனஸ்தாபம் இருந்தது.

இதன் காரணமாக தாய், தந்தையை பார்ப்பதைக்கூட விஜய் தவிர்த்துவிட்டு படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். இப்படி தந்தை, மகன் என இந்த பஞ்சாயத்தை பார்த்த நாம் விஜயின் மனைவி சங்கீதாவை மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் விஜய் தாய், தந்தையை பிரிந்திருந்த காலக்கட்டத்தில் தன் மனைவி சங்கீதாவுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.

கடைசியாக இருவரும் இணைந்து 2021 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்து கலந்துக்கொண்டனர். அதன் பின் விஜயின் மனைவி சங்கீதாவை விஜயுடன் நம்மால் பார்க்க முடியவில்லை. அண்மையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற வாரிசு ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் கூட அவரது மனைவி கலந்துக் கொள்ளவில்லை

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் அட்லீயின் மனைவி ப்ரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட விஜய் தன்னந்தனியாக கலந்துகொண்டார். சமீபத்தில் விஜய் சென்ற திருமண நிகழ்ச்சியில் கூட அவர் மட்டுமே கலந்துகொண்டார். இதனிடையே இந்த வருடம் தொடக்கத்திலிருந்து விஜய் தன்னந்தனியாகத்தான் பொது இடங்களுக்கு தன் மனைவி இல்லாமல் சென்று வருகிறார்.

இதனிடையே இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்து பெற்று வாழ்ந்து வருவதாக செய்திகள் பரவியுள்ளது. நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு லண்டனில் வசித்து வந்த தனது மனைவியான சங்கீதாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இத்தம்பதிக்கு சஞ்சீவ், திவ்யா என இரு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது உறுதியாகியுள்ளது. இதனை வெளிப்படையாகவே பிரபல ரிப்போட்டர் பாண்டியன், தமிழா யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக விஜய்யின் மனைவி சங்கீதா தற்போது லண்டனில் வசித்து வருகிறாராம். விஜய்யின் பிள்ளைகளின் படிப்பிற்காக அவர் அங்கு தங்கியுள்ளதாக அண்மையில் பேசப்பட்ட நிலையில், உண்மையில் விஜய்யும் சங்கீதாவும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்கள். இதன் காரணமாக நடிகர் விஜய் சமீபகாலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை விஜய் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியிட்டால் தான் தெரியவரும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →