பிரம்மாண்டமாக நடக்க உள்ள விஜய்யின் முதல் மாநாடு எங்க தெரியுமா? தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பபுள்ளி

Actor Vijay : விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருந்தார். ஆனாலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடப் போவதில்லை என்பதை அறிவித்துவிட்டார். அதாவது 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தான் தளபதி களமிறங்க இருக்கிறார்.

இப்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் இன்னும் ஒன்று அல்லது இரண்டு படங்களுடன் சினிமா கேரியரை முடித்துக் கொள்ள இருக்கிறார். அதன்பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார்.

இந்த சூழலில் அதற்குள்ளாகவே வருகின்ற ஏப்ரல் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். பொதுவாக விஜய்யின் படங்களின் இசை வெளியீட்டு விழாவே மாநாடு போல் நடக்கும். இப்போது அவரது அரசியல் மாநாட்டை தமிழகமே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு மதுரையில் மிகப்பிரமாண்டமாக நடத்த இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் விஜய் எல்லாமே மிகவும் பக்காவாக திட்டம் போட்டு செய்து கொண்டிருக்கிறார். வருகின்ற ஏப்ரலில் மாநாடு நடக்க வாய்ப்பு இல்லை. இப்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த அதற்கான வந்த பிறகுதான் விஜய் தன்னுடைய ஆட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் 100 கட்சி மாவட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனராம். சில நிபந்தனைகள் உடன் பொறுப்பாளர் நியமனம் நடைபெற இருக்கிறது. அதாவது கட்சி நிர்வாகி எத்தனை உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட இருக்கிறதாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →