சீனாவில் கொள்ள வசூலை கொட்டிக் கொடுத்தாலும் No 2 வில் தான் மகாராஜா.. அப்போ முதல்ல கஜானாவை நிரப்பியது யாரு?

விஜய் சேதுபதியின் 50 வது படமான மகாராஜா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படங்கள் ஓடாமல் துவண்டு போயிருந்த அவருக்கு இந்த படம் மரண மாஸ் ஹிட்டாக அமைந்தது. வெறும் 30 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

மகாராஜா படத்தை இந்தியாவில் மட்டுமல்லாது உலக அரங்கிலும் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அப்படி சீனாவில் அந்த படம் திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் செய்து ஒரு மாதம் ஆகியும் நல்ல வசூலை பெற்று தருகிறதாம்.

எப்படி ஜப்பான் நாட்டில் ரஜினிகாந்தின் முத்து படம் ஓடி நல்ல லாபத்தை பெற்று தந்ததோ அதை போல் இப்பொழுது சீனாவில் மகாராஜா படமும் பட்டையை கிளம்பி வருகிறது. இதுவரை 92 கோடிகள் அந்த நாட்டில் மட்டும் வசூலித்துள்ளதாம்.

இவ்வளவு வசூல் செய்தும் மகாராஜா படத்திற்கு கிடைத்தது என்னமோ இரண்டாவது இடம் தானாம். எப்படியும் இந்த படம் இன்னும் வரும் நாட்களில் மூன்றில் இருந்து ஐந்து கோடிகள் வரை அந்த நாட்டில் வசூலித்து தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது வரை சீன நாட்டில் அதிக வசூலைத் தந்த இந்திய படம் என்ற பெருமையை தக்க வைத்திருப்பது அமீர்கான் நடிப்பில் வெளிவந்த Dangal படம் தான். 2016 இல் வெளிவந்த இந்த படம் சீன மொழியிலும் திரையிடப்பட்டது. அங்கே 107 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment