சியான் விக்ரமுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அப்படின்னா விஜய் சேதுபதிக்கு தகுதி இல்லையா?

விகடனின் விருதுகளை நேற்று அறிவித்தது, அதில் சிறந்த நடிகருக்கான விருது விடுதலை 2 மற்றும் மகாராஜா படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீயான் விக்ரமுக்கு தகுதி இல்லையா? அவருக்கு ஏன் அந்த அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதி, சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவி, சிறந்த பேக்ரவுண்ட் இசைக்காக ஜிவி பிரகாஷ், அறிமுக ஹீரோவாக ஜமா படத்தில் நடித்த பாரி இளவரசன் மற்றும் அறிமுக இயக்குனராக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கலான் படத்திற்கு சீயான் விக்ரமின் உழைப்பு மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த படத்திற்கு ஏன் சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கவில்லை என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் கேட்டு வருகின்றனர். சிலர் விடுங்க தலைவா நம்ம ஆஸ்கர்ல ஜெயிச்சுக்கலாம் என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஏற்கனவே விகடன் விருது மேடையில் பார்த்திபன் ஒத்த செருப்பு படத்திற்கு ஏன் விருது கொடுக்கவில்லை? ஆஸ்கரில் எனது படம் லிஸ்ட் ஆகிவிட்டது ஆனாலும் நீங்கள் விருது கொடுக்கவில்லை, இனி கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன் என்று ஓபனாக கூறிவிட்டு மேடையை விட்டு வெளியேறினார்.

தற்போது விஜய் சேதுபதிக்கு கொடுத்தது தவறல்ல, ஆனால் விக்ரம் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளம். அவரை பெருமைப்படுத்தும் விதமாக தங்கலான் படத்தை வைத்து விருது வழங்கியிருக்கலாம் என்று விவாதம் சூடு பிடித்து உள்ளது.

இந்த மனுஷன் உசுர கொடுத்து நடிச்சிருக்காரு ஆனா விகடன் இவருடைய நடிப்புக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை, ஒரு வரலாற்றுப் பிழையை செய்து விட்டது போன்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். தங்கலான் படம் மறைமுகமான அரசியலை பேசும் என்பதால் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →