விஜய் டிவிக்கே சரியான பாடம் கற்பித்த விக்ரமன்.. தவறை மாற்றிய பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் விக்ரமன் இறுதிவரை செல்வார் என பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் அவருடைய ஒவ்வொரு கருத்தும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. இதனால் இவருக்கு பேர் ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவிக்கு சரியான பாடம் கற்பித்துள்ளார் விக்ரமன். அதாவது இந்த வார டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய் பீம் படத்தைப் போல பழங்குடி மக்களின் வாழ்வியலை சொல்லும் படியான டாஸ்காக இருக்க உள்ளது.

இந்த டாஸ்கினை ஷிவின் படிக்கும்போது பழங்குடி மக்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்ற எழுதப்பட்டுள்ளது. உடனே விக்ரமன் சந்தேகத்துடன் அடிமையா என்று கேட்டுள்ளார். யாரையும் அடிமை என்று குறிப்பிடுவது தவறானது என்ற விக்ரமன் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் பிக் பாஸ் சில நிமிடங்களிலேயே இந்த வார்த்தையை வேலைக்காரன் என்று மாற்றிக் கொள்ளுங்கள். பழங்குடியினரை இழிவுபடுத்த வேண்டாம் என போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். அதன் பிறகு ஷிவினிடம் விக்ரமன் கலந்துரையாடல் போது அடிமை என்ற சொல் பயன்படுத்துவது மிகவும் தவறு என கூறினார்.

விஜய் டிவி ஒவ்வொரு டாஸ் கொடுக்கும் போதும் பலமுறை படித்துப் பார்த்து கொடுக்க வேண்டும். ஆனால் அந்த தவறை தற்போது விக்ரமன் சுட்டிக்காட்டி விஜய் டிவியை காப்பாற்றி உள்ளார். இப்போது விக்ரமன் சொன்ன அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இவ்வாறு சில துல்லியமான விஷயங்களையும் விக்ரமன் மிகவும் கவனமாக கையாள்வது தான் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. தொடர்ந்து விக்ரமனுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் கண்டிப்பாக பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →