ஹெச் வினோத் தற்போது உள்ள இளம் இயக்குனர்களில் முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுகிறார். தன்னுடைய முதல் படமான சதுரங்க வேட்டை படத்திலேயே முத்திரை பதித்தார். இந்தப் படத்தைப் பார்த்து அஜித் இயக்குனர் வினோத் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அதனால் உருவானது தான் நேர்கொண்ட பார்வை படம்.
இந்த படமும் வெற்றி பெற இதே கூட்டணியில் அடுத்ததாக வலிமை படம் உருவானது. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கோவிட் தொற்று காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு தள்ளி போனது. ஒருவழியாக படமும் வெளியான நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது.
ஆனால் அதன் பின்பு பாசிட்டிவ் கமெண்ட் வர படம் நல்ல வசூலை வாரி குவித்தது. இப்போது மூன்றாவது முறையாக வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் துணிவு. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ஆனால் இந்த மூன்று படங்களிலும் வினோத்துக்கான சுதந்திரம் கிடைக்கவில்லை.
ஏனென்றால் இந்தக் கூட்டணியில் வினோத் தான் இளம் வயது உடையவர். ஆகையால் இவரது பேச்சு அங்கு எடுபடவில்லை. அதுமட்டுமின்றி எதையும் எதிர்த்தும் அவரால் பேச முடியவில்லை. முதுகில் இருந்து இறங்கிய வேதாளம் போல இப்போது தான் அஜித்தை விட்டுவிட்டு தனுஷ் படத்தை இயக்க உள்ளார்.
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர், வாத்தி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷ் தன்னுடன் பணியாற்றும் இயக்குனர்களுடன் மிகவும் நட்பாக பழகக்கூடியவர். அவர்களது கருத்துக்களுக்கும் முன்னுரிமை கொடுத்து எல்லா விஷயங்களையும் எடுத்துக் கொள்வார்.
ஆகையால் தனுஷின் படத்தில் வினோத்துக்கு முழு சுதந்திரம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. மேலும் கிட்டதட்ட ஐந்து வருட கூட்டணியில் இருந்து வினோத் இப்போது விடைபெறுகிறார்.