15 வயது வித்தியாசம், அருண் விஜய்யின் அண்ணியை திருமணம் செய்யும் விஷால்.. வயசானாலும் தரமான செலெக்ஷன்

விஷால் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி பின்னர் நடிகர் சங்க தலைவர் ஆனார். பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடிகர் சங்க தலைவராக இன்று வரை தொடர்ந்து வருகிறார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்து பின்னர் திருமணம் செய்வேன் என்று உறுதியளித்தார். ஆனால் இன்றுவரை நடிகர் சங்க கட்டிடம் கட்ட படாமலே இருந்து வருகிறது காரணம் பொருளாதார ரீதியாக பிரச்சினை இருப்பதாக விஷால் கூறியுள்ளார்.

ஆரம்ப காலக் கட்டத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமியுடன் காதலில் இருக்கிறார் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல பிரச்சினைகள் வந்ததால் இருவரும் பிரிந்தனர். பின்னர்  சில வருடங்களுக்கு முன்பு அனுஷா என்ற தொழிலதிபரின் பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்ததாக அறிவித்தார். அந்த திருமணமும் நடைபெற வில்லை.

45 வயதாகும் விஷாலுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டு வந்த நிலையில் தற்போது அவர் சினிமா நடிகை அபிநயா என்பவரை திருமணம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாடோடிகள், குற்றம் 23  இன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அபிநயா. காது கேளாதவர்  மற்றும் வாய் பேச முடியாதவர். இவரை விஷால் அவர்கள் திருமணம் செய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த படத்தில் அருண் விஜய்க்கு அண்ணியாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

இந்த தகவல் விஷால் அவர்களின் இன்னும் உறுதிப்படுத்தவில்லை ஆனால் சோசியல் மீடியாக்களில்  மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன. விஷால் பண ரீதியாக மட்டுமே அனைவரிடமும் பழகுவார் ஆனால் அபிநயா சாதாரண நடிகை அவரை விஷால் திருமணம் செய்து கொள்வார் என்பது நம்ப முடியவில்லை என்று சினிமாவில் உள்ள பிரபலங்கள் பேசிக்கொள்கின்றனர்.

விஷாலுக்கு தற்போது இருக்கும் சூழலில் பல கெட்ட பெயர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மற்றவர்கள் படத்திலும் ஒழுங்காக நடிப்பதில்லை மற்றும்  தன் சொந்த படத்திலும் ஒழுங்காக நடிப்பதில்லை. இவரால் பல தயாரிப்பாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்று ஆனால் இவர் மீது புகார் ஏதும் அளிக்க முடியவில்லை காரணம் உதயநிதி என் நண்பன் என்னை ஏதும் செய்ய முடியாது என்று பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிமுடிக்காமல் இருப்பதால் அதை முடித்தால் மட்டுமே எனக்கு திருமணம் என்று கூறிவந்த விஷால் தற்போது இதைப்பற்றி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வயதிலும் திருமணம் செய்யாமல்  இருப்பதால் விஷாலுக்கு அவர் குடும்பத்தினரும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள். ஆகையால் கூடிய விரைவில் திருமண செய்தி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →