3வது முறையாக திருமணத்திற்கு தயாரான விஷால்.. 44 வயதில் கரம் பிடிக்கும் புதிய காதலி

வினோத் குமார் இயக்கத்தின் விஷால் நடிக்கும் லத்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தில் விஷாலுக்கு விபத்து ஏற்பட்டது. அதனை கூட படக்குழுவினர் பதிவிட்டு நலமாக இருப்பதாக கூறி வந்தனர்.

இன்னிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற பதவியை பெற்றிருக்கும் விஷால், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் நிதி சிக்கல், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கட்டிட பணி தடைபட்டது.

இதனால் 44 வயதான விஷால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே செல்வதால் விரைவில் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறார் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் அவருடைய வாயாலேயே தன்னுடைய வருங்கால மனைவி பற்றி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே விஷால் மற்றும் நடிகை சரத்குமார் அவர்களின் மகளும் நடிகையுமான வரலட்சுமி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இருவரும் இதைப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் இவர்கள் விழாக்களுக்கு ஒன்றாக சென்று வந்தனர். பின்பு வரலட்சுமி வீட்டில் விஷாலை பிடிக்கவில்லை.

அதனால் இருவரும் பிரிந்ததாக கூறினர். அதன்பிறகு 2019 ஆம் ஆண்டில் விஷால், ஆந்திராவைச் சேர்ந்த நடிகை அனிஷா அல்லா ரெட்டியை காதலித்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்பு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சமீபத்தில் விஷாலிடம் திருமணத்தை பற்றி பேசியுள்ளனர்.

அதில், விஷால் வீட்டில் பார்க்கும் திருமணம் எனக்கு செட்டாகவில்லை. அதனால் காதலித்து தான் திருமணம் செய்துகொள்வேன். தற்போது காதலித்து வருகிறேன். விரைவில் என் மனைவி பற்றி சொல்கிறேன் என கூறியுள்ளார். எப்படியாவது மூன்றாவது காதலை தக்க வைத்துக் கொண்டு சீக்கிரம் கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என விஷால் தனது திருமணத்தில் உறுதியாக இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →