எனக்கு ஹீரோயின் சப்ஜெக்ட் தான் வேணும்.. மவுஸ் குறையாததால் அடம்பிடிக்கும் தனுஷ் பட ஹீரோயின்

சமீபகாலமாக நடிகை ஒருவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடித்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றது. இப்பொழுது அம்மணி அதே ரூட்டை ஃபாலோ பண்ணுகிறாராம் . ஹீரோயின்க்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை ரிஜெக்ட் செய்கிறாராம்.

சமீபத்தில் சாய் பல்லவி பெண்களை மையமாக வைத்து நடித்த படங்கள் நல்லவராக பெற்று வருகிறது. ரசிகர்களும் சாய் பல்லவியை கதாநாயகிகளை வலுவாக பேசக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் விரும்புகின்றனர். ஆதலால் சாய் பல்லவி அதே ரூட்டை கடைபிடித்து வருகிறார்.

தமிழ் பெண்ணான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அண்டை மொழிகளில் எல்லாம் கலக்கிக் கொண்டிருப்பது ரசிகர்களை பெருமை அடைய செய்கிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மலர் டீச்சராகவே இளசுகளை கட்டி போட்டு வைத்திருக்கிறார்.

இவருக்கு சிறுவயதிலிருந்தே நடனத்திலும் அதிக ஆர்வம். ஆகையால் இவர் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பாடல்களில் எல்லாம் டான்ஸில் பிச்சு உதறுவார். இவர் தமிழிலும் தனுஷ் மாரி 2, சூர்யாவுடன் என்ஜிகே போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சாய் பல்லவி நடிகர்களுடன் நடிப்பதை காட்டிலும் சோலோ பர்பாமென்ஸ் கொடுக்கவே விரும்புகிறார். இதனாலையே ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட கதைக்களத்தையே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

இதனால் ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை மட்டுமே கேட்கவும் தயாராக இருக்கிறார். மற்ற நடிகைகளை போல் நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்யும் சப்ஜெக்ட் கொண்ட கதைகள் வந்தால், அதை வேண்டவே வேண்டாம் என்றும் நிராகரிக்கிறாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →