நம்ப வைத்து கழுத்தறுத்த நடிகர்.. 25 வருடங்களாக நடித்தும் பரிதாபமான நிலையில் இருக்கும் பிரபலம்

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அடையாளம் காணப்பட்டவர் தான் போண்டாமணி. வடிவேலுவுடன் இணைந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் ஒரு நகைச்சுவை காட்சியில் போலீஸ் என்ன எங்கன்னு கேட்பாங்க, அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் உண்மையை சொல்லிடாதீங்க என்று பேசும் வசனம் அவரை அதிக பிரபலம் ஆக்கியது.

அதைத்தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வந்த அவர் சமீப காலமாக பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதிலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அப்போது அவருக்கு பல நடிகர்கள் உதவி செய்தாலும் அவருடன் நடித்த வடிவேலு மட்டும் எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலையில் அவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிய அளவில் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லையாம். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட போண்டாமணிக்கு சொந்த பந்த உறவுகள் எல்லாம் அங்கு தான் அதிகமாக இருக்கிறார்கள்.

நடிப்பு ஆசையில் சென்னைக்கு வந்த அவருக்கு இங்கு பெரிய அளவில் நட்பு வட்டாரங்கள் இல்லையாம். இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் வெறும் 90 படங்களில் மட்டுமே நடித்திருக்கும் அவருக்கு பெரிய அளவில் சொத்து எதுவும் கிடையாது. இதுவரை அவர் முப்பது லட்சங்கள் கூட சம்பாதிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

ஒரு படத்தில் நடிக்க அவர் கமிட் ஆனால் வெறும் ஐந்து அல்லது ஆறு நாட்கள் மட்டுமே அவருக்கான சூட்டிங் இருக்குமாம். அதிலும் பெரிய அளவில் சம்பாத்தியம் எதுவும் அவருக்கு கிடைக்காது. கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அவர் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்வதே பெரும் பாடாக இருந்திருக்கிறது.

அதிலும் சில சமயம் அவர் நடித்த படங்களில் சரியாக சம்பளமும் கிடைக்காதாம். இப்படி கிடைக்கும் வருமானத்தை வைத்து அன்றைய வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்த போண்டாமணிக்கு மருத்துவ சிகிச்சை பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பல திரைப்படங்களில் கூடவே நடித்த இந்த போண்டாமணிக்கு வடிவேலு ஏன் உதவி செய்யவில்லை என்பதுதான் தற்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →