சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியன் 2, பத்து தல உட்பட பல திரைப்படங்களில் இவர் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கைவசம் ஏராளமான திரைப்படங்கள் இருந்தும் இவர் தற்போது கடும் அப்செட்டில் இருக்கிறாராம். ஏனென்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகளுக்கு தற்போது கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சினிமாவிற்கு வந்து இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் இவருக்கு சில லட்சங்கள் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
அதிலும் இவர் கார்த்தி, தனுஷ், அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படி இருந்தும் இவருடைய சம்பளத்தை ஏற்ற எந்த தயாரிப்பாளரும் முன் வரவில்லை. அது மட்டுமல்லாமல் இரண்டாவது, மூன்றாவது ஹீரோயின் போன்ற கேரக்டர்களில் நடிக்க மட்டுமே இவருக்கு அழைப்பு வருகிறதாம்.
சில நிமிடங்கள் மட்டுமே தலைகாட்டும் கேரக்டரில் நடிப்பதால் தான் இவருடைய சம்பளமும் உயராமல் அப்படியே இருப்பதாக இவர் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். மேலும் தனக்கு சம்பளம் அதிகமாக வேண்டும் என்று கேட்டால் வேறு ஹீரோயினை தயாரிப்பாளர்கள் தேடி போய் விடுகிறார்களாம்.
அதனால் கிடைத்த வரை லாபம் என்று அவர் சிறு சிறு கதாபாத்திரங்களை கூட ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் சிறிது நேரம் மட்டுமே இவருடைய காட்சிகள் இருந்தது.
இதனால் மன உளைச்சலில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர் இனிமேல் கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க இருக்கிறாராம். அப்பொழுதுதான் தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு அதிகப்படுத்த முடியும் என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.