யார் NO-1 பிரச்சினை உங்களால தான்.. நீங்க வாயை மூடிட்டா போதும் பயங்கர காட்டத்தில் சமுத்திரக்கனி.!

கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் யார் நம்பர் ஒன் என்ற கேள்வி பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து ரசிகர்களும் தங்களுக்குள் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, பத்திரிக்கையாளர்கள் தற்போது அனைத்து பிரபலங்களிடமும் கேட்கும் ஒரே கேள்வி யார் நம்பர் ஒன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்ற கேள்வி.

இதை கேட்டு கேட்டு பல பிரபலங்கள் கடுப்பாகிவிட்டனர். தற்போது சமுத்திரகனியிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. யாரும் நம்பர் ஒன் இல்லை அனைவரும் சமம் தான். பத்திரிகையாளர்கள் ஒரு சில பேர் இப்படி கேட்டு கேட்டு பிரச்சனை ஆகி ரசிகர்களிடையே சண்டையை மூட்டி வருகிறீர்கள்.

நீங்கள் நிறுத்துங்கள். ரசிகர்கள் அவர்கள் வேலையை அவர்கள் பார்ப்பார்கள், நடிகர்களுக்குள்ளும் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் நன்றாக பழகி வருகிறார்கள். அவர்களையும் கெடுக்காதீர்கள். இப்படி தைரியமாக பத்திரிகையாளர்களை முகத்தில் அடித்தது போல் சொல்லி விட்டார் சமுத்திரகனி.

அதேபோல் ஓடிடி-யில் சிறிய படங்களுக்கு வாய்ப்பில்லை என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பிய இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு சமுத்திரக்கனி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் பா. ரஞ்சித் அளித்த பேட்டியில், வருடத்திற்கு 20 படங்கள் வரை வாங்கும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களை தான் வாங்குகிறது.

இவர்கள் ஒரு படம் கூட சிறிய பட்ஜெட் படங்களை வாங்கிய சரித்திரம் இல்லை. மேலும் ஹாட் ஸ்டார் உள்ளிட்ட மற்ற ஓடிடி-கள் கம்மி பட்ஜெட் படங்களை வாங்குவதிலும் பார்ப்பதிலும் இங்கு வெளிப்படை தன்மை சுத்தமாகவே இல்லை. பெரிய இயக்குனர்கள் அவர்களது செல்வாக்கை பயன்படுத்தி ஓடிடி நிறுவனத்தை எளிதாக அணுகி படத்தை விற்று விடுகின்றனர். ஆனால் இளம் இயக்குனர்கள் ஒரு படத்தை எடுத்து ஓடிடி தளத்திற்கு விற்பதில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இவ்வாறு கருத்து தெரிவித்த பா. ரஞ்சித்துக்கு சமுத்திரக்கனி பதில் கொடுத்திருக்கிறார். ஓடிடி நிறுவனத்திற்கு என்றே ஒரு அளவுகோல் இருக்கிறது. அந்த தகுதிக்கு ஏற்றவாறு படங்கள் இருந்தால் கண்டிப்பாக எந்த படங்களாக இருந்தாலும் ஏற்று கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →