கூலி-க்கு ஏன் இவ்வளவு பில்டப்? ஒருவேளை இதான் காரணமா இருக்குமோ

Coolie : கூலி படம் இன்னும் ரிலீசே ஆகவே இல்லை. அதுக்குள்ள இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் அனைத்து மக்களையும் கூலி படத்தோட ஹைப் குறையாம வைச்சுருக்கதுதான்.

லோகேஷ், படம் ரிலீஸ் ஆகி நல்லபடியா வெற்றிபெறவேண்டும் என்று திருவண்ணாமலை கோவில் சென்று தரிசனம், இதற்கு அடுத்து ராமேஸ்வரம் சென்று நீராடி சாமி தரிசனம் என அன்மீக பயணத்தில் மூழ்கி விட்டார்.

ஒருவேளை இதான் காரணமா இருக்குமோ..

இதற்கு அடுத்து ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம், கூலி படம் வெற்றிபெற வேண்டும் என்று கோவிலில் மண்சோறு சாப்பிடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்தால் இவர்கள் அவ்வளவு தீவிர ரசிகர்களா? இல்லை காசை வாங்கிக்கொண்டு இதையெல்லாம் செய்கிறார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன.

அப்படி கூலி படம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என என்ன ஒரு கட்டாயம் இருக்கிறது. இதுவரை வெளிவந்த ரஜினி படத்தில் எதுவுமே தோல்வி அடையலயா? என இதெல்லாம் ஓவர் பில்டப்-ஆ இருக்கே என கூறி வருகிறார்கள். ஒருவேளை ரஜினியின் 50ஆவது திரைப்பயணத்தை நிறைவு செய்யும் போது ரஜினிக்கு கூலியின் வெற்றியை பரிசளிக்க வேண்டும் என இவ்வாறு செய்கிறார்களா?

இல்லையென்றால் மாறன் குடும்பத்தில் நடந்து வரும் பிரச்சினைக்கு பணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கலாநிதி மாறனை அந்த நட்டத்தில் இருந்து மீட்க இவ்வாறுதான் உதவ வேண்டும் என ரஜினியும், லோகேசும் முடிவு செய்து கலாநிதி மாறனுக்கு உதவுவதற்காக இவ்வாறு போராடுகிறார்களா? என திரைவட்டாரங்கள் பேசிவருகிறார்களாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →