ஸ்ரீகாந்துக்கு ஒரு நியாயம், விஜய் சேதுபதிக்கு ஒரு நியாயமா.? பாகுபாடு பார்ப்பது ஏன்?

Vijay Sethupathi : நேற்றைய தினம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ஸ்ரீகாந்த் கைது தான். அதாவது போ..தைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். படத்தில் நடித்த போது சம்பள பாக்கிக்கு பதிலாக போ..தை பொருளை பிரசாத் என்பவர் கொடுத்துள்ளார்.

இரண்டு முறை அதை வாங்கி பயன்படுத்தியதால் அதற்கு அடிமையாகி மூன்றாவது முறை இவரே வாங்கியதாகவும் விசாரணையில் கூறியிருக்கிறார். அதோடுமட்டுமல்லாமல் வீட்டிலேயே போ..தை பொருள் பார்ட்டியும் நடத்தி இருக்கிறார்.

இதில் பல சினிமா பிரபலங்கள் சிக்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதில் நடிகர் கிருஷ்ணாவை போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்த நிலையில் அவர் தலைமறைவு ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜய் சேதுபதியை ஏன் விசாரிக்கவில்லை என்று இணையத்தில் ஒருவர் கேட்டிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் போல் விஜய் சேதுபதியை ஏன் விசாரிக்கவில்லை

srikanth
srikanth

அதாவது போ..தை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கு உடன் தொடர்பில் இருந்த நடிகர் விஜய் சேதுபதியை விசாரிக்குமா இந்த தமிழக காவல்துறை என்று வினவி இருக்கிறார். ஏற்கனவே அமீரும் இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay-sethupathi
vijay-sethupathi

இதற்கு விஜய் சேதுபதி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது ஒருவருடன் நட்பு வைத்திருந்தால் அவரும் அந்த தவறு செய்திருப்பார் என்று அர்த்தமாகுமா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஸ்ரீகாந்த் கைது நடவடிக்கை பிறகு கோலிவுட் மிகவும் பரபரப்பாக இருக்கிறது.

இதில் பல திரை பிரபலங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியான நிலையில் யார் யார் மாட்டுவார்கள் என்ற அச்சமும் இருக்கிறது. அடுத்தடுத்து யார் பேர் வரப்போகின்றதோ என்ற பதட்டமும் ரசிகர்கள் இடத்தில் இருக்கிறது. ‌

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →