6வது வெற்றியை கொடுக்குமா வெற்றிமாறனின் விடுதலை.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

வெற்றி இயக்குனராக திகழ்ந்துவரும் வெற்றிமாறனின் விடுதலை படம் எப்போது ரிலீஸாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட் வைத்துள்ளார். சூரி, விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. வனப்பகுதியில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக எடுத்து வந்தனர். விடுதலை படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம். அந்த வகையில் விடுதலை படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர் ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார்.

viduthalai-review

அதன்படி முதல் பாதி மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருந்ததாகவும், வெற்றிமாறனுக்கு உண்டான சாயல் இந்தப்படத்திலும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சூரியின் கேரக்டரில் அவ்வளவு கண்ணியமாக இருந்ததாகவும், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

viduthalai

மேலும் மற்றொரு ரசிகர் விடுதலை படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் அற்புதமாக இருந்ததாகவும், விஜய் சேதுபதி மற்றும் சூரியின் நடிப்பு பிரதாப் பிரமாதம் என கூறியிருந்தார். மேலும் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். ஸ்னீக் பீக் வைப்பதன் மூலம் பகுதி 2 க்கு சரியான உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

viduthalai-twitter-revie

ஒரு புலனாய்வு படமாக விடுதலை படம் அற்புதமாக. ஆணித்தரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகி பவானி ஸ்ரீ நடிக்கும் அபாரம், விஜய் சேதுபதி 15 நிமிட ரோலில் அசத்தியுள்ளார். விடுதலை படம் பிளாக்பஸ்டர் ஹிட் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

viduthalai-review

வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை போன்ற வரிசையில் அவருடைய ஆறாவது படம் விடுதலையும் மிகப்பெரிய வெற்றி கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சூரிக்கும் இப்படம் மிகப்பெரிய பெயரை வாங்கித் தர இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →