விஜய்க்கு போன் போட்ட யாஷ்.. ராக்கி பாய் சொன்னதை கேட்டு துள்ளி குதித்த தளபதி

தமிழ் சினிமாவில் விஜய் எப்படி மாஸ் இடத்தில் இருக்கிறாரோ அதேபோல் கன்னட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர் யாஷ். அதுமட்டுமின்றி கே ஜி எஃப் படத்தினால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் யாஷ் தன்வசம் இழுத்துள்ளார். அதில் அவரது ராக்கி பாய் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 படமும், விஜய்யின் பீஸ்ட் படமும் நேர் எதிராக மோதிக்கொண்டது. ஆனால் இதில் பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் வசூலில் சருக்களை சந்தித்தது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கேஜிஎஃப் 2 படம் நல்ல வசூலை பெற்றது.

மேலும் கே ஜி எஃப் 2 படத்தால் தான் பீஸ்ட் படம் தோல்வியுற்றதாக அப்போது விமர்சனம் பேசப்பட்டது. ஆனால் இப்போது விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் டைட்டில் வீடியோவை பார்த்துவிட்டு யாஷ் தளபதிக்கு போன் போட்டு பேசி உள்ளார்.

அதாவது தளபதியிடம் லியோ டீசர் கிளாஸாக இருப்பதாக நெகிழ்ச்சியாக யாஷ் பேசி உள்ளாராம். மேலும் இப்போதே இந்த படம் 100 சதவீதம் வெற்றி உறுதி என்பது போல பல விஷயங்களை விஜய்யிடம் பேசியதாக கூறப்படுகிறது. டாப் நடிகர்களின் ரசிகர்கள் வெளியில் போட்டி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் அந்த நடிகர்களே நட்பாகவும், ஒருவர் படத்தை பற்றி மற்றவர் ஊக்குவிக்கும் படி பேசி கொள்கிறார்கள். இது சினிமாவில் ஒரு நல்ல நிலைப்பாடாக உள்ளது. இதை ரசிகர்கள் புரிந்து கொள்ளாமல் சமூக வலைதளங்களில் ஒருத்தரப் ஹீரோவின் ரசிகர்கள் மற்ற ஹீரோக்களை பற்றி கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள்.

மேலும் விஜய்க்கு யாஷ் போன் செய்து பேசியது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் எல்சியுவில் யாஷ் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது. ஏனென்றால் லியோ படத்தில் யாஷ் நடித்தாலும் அது ஆச்சரியம் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →