சனியன தூக்கி பனியன்ல போட்டுக் கொள்ளும் யாஷிகா.. பழைய கதை மறந்து போச்சா அம்மணி!

கவர்ச்சி கட்டழகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த யாஷிகா ஆனந்த், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான கடமை செய் என்கின்ற படத்தில் எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படமும் போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. இருப்பினும் யாஷிகா ஆனந்த் எப்போதுமே நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி வரும் கேரக்டர் என்பது அனைவருக்கும் தெரியும்.

யாஷிகா ஆனந்த் இப்பொழுது படங்கள் கையில் இல்லாததாலும் சமூக வளைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். ஆகையால் படத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனால் பார்ட்டி பப் செல்வதற்கு மட்டும் அம்மணி மறப்பதில்லை.

ஏற்கனவே ஒருமுறை மகாபலிபுரம் பார்ட்டிக்கு சென்று வருகையில் பெரிய விபத்து ஏற்பட்டு 6 மாதம் வரை ICU இருந்து உயிர் பிழைத்து வந்தார். மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசையில் இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.

இப்படி நன்றாக போய்க் கொண்டிருக்கும் யாஷிகா ஆனந்த் வாழ்க்கையில் அவரே சனியனை தூக்கி பனியனில் போட்டுக் கொள்ளும் வேலையை பார்த்துள்ளார். ஏனென்றால் அம்மணிக்கு பழைய கதை மறந்திருச்சு போல! இப்போது கார் விபத்தில் உயிர் தப்பியத்தையெல்லாம் மறந்து, புது கார் வாங்கி ஊர் சுற்ற போகிறாராம்.

இந்த முறை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அதிக வசதிகள் கொண்ட 25 லட்சம் மதிப்புள்ள Volkswagen Virtus மாடல் காரை யாஷிகா வாங்கி இருக்கிறார். பழசை எல்லாம் மறந்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி கொள்வதற்காக அந்தக் காரில் நண்பர்களுடன் லாங் டிராவல் செய்யவும் பிளான் போட்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →