நாகேஷ் இடத்தை சிக்குனு பிடித்த யோகி பாபு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க காண்ட்ராக்டர் நேசமணி

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சிறு கதாபாத்திரங்களில் நடித்து பெரிய காமெடி நடிகனாக தற்போது வளர்ந்து வருகிறவர் தான் யோகி பாபு. இப்பொழுது வருகிற எல்லா படங்களிலும் இவரிடம் முதலில் கால் சீட் வாங்கின பிறகு தான் நடிகர், நடிகைகளின் கால் சீட் வாங்குகிறார்கள். அந்த அளவுக்கு பெரிய நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடிக்கு ஒரு நிரந்தர காமெடியனாக இருப்பதில்லை. சந்தானம் காமெடியில் ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு காமெடியை விட்டுவிட்டு படத்தில் ஹீரோவாக நடிக்க போய்விட்டார். அதன் பிறகு சதீஷ், சூரி என வந்தாலும் யோகி பாபு போல இதுவரை இவர் இடத்தில் யாராலும் பிடிக்க முடியவில்லை.

இவர் எந்த மாதிரி கதைகளை எடுத்தாலும் இவரின் பெர்பார்மன்ஸ் மூலம் இவருக்கு அதிகமான கைதட்டல்கள் கிடைக்கிறது. இவர் பெரிய நடிகர்களின் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தாலும் நன்றாக இருக்கிறது. அதே போல் கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து விருது வாங்க அளவிற்கு இவரை வெற்றியடைய செய்திருக்கிறது.

பொதுவாகவே சினிமாவில் சில கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சில நடிகர்கள் யோசிப்பார்கள். ஆனால் இவர் எந்தவித யோசனையும் இல்லாமல் எல்லாவிதமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இது காமெடி நடிகர் நாகேஷ் அவரின் பாணியை பின்பற்றுவது போல் யோகி பாபு இந்த மாதிரியான சிறு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிப்பது நாகேஷ்சை நம் நினைவுக்கு கொண்டு வருகிறது.

சில காமெடி நடிகர்களைப் போல இவர் எந்தவித பந்தாவும், திமிரான பேச்சையும் எந்த இடத்திலும் காட்டாமல் இருப்பது இவருடைய சிறப்பு. இவரைப் பார்த்து வடிவேலு கண்டிப்பாக இந்த செயல்களை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

வைகைபுயல் வடிவேலு காமெடிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தாலும் இவருடைய சில குணத்தால் பல சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் ஒரு ஓரமாய் அடங்கி போயிருந்தார். மேலும் இவர் கடைசியாக நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் இவருக்கு வெற்றியடையவில்லை.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →